பி.எஸ்.ஜி.யில் ஆசிரியர் தின விழா

பி. எஸ். ஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆசிரியர்கள் தி‌ன விழா பி. எஸ். ஜி தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். இவர்களுடன் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன், பி. எஸ். ஜி இன்ஸிடிடியூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டெடீஸின் இயக்குனர் ராதா கிருஷ்ணன், தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் பிராகசன், மருத்துவமனை டீன் ராமலிங்கம் ஆகியோர் முதன்மை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பி. எஸ். ஜி யை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பி. எஸ். ஜி தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் பிராகசன் வரவேற்புரையாற்றினார்.
இவரை தொடர்ந்து பி. எஸ். ஜி இன்ஸிடிடியூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டெடீஸின் இயக்குனர் ராதா கிருஷ்ணன் பி. எஸ். ஜி சிறந்த ஆசிரியர் விருதுகளை பற்றி விவரித்தார்.
‘பி. எஸ். ஜி சிறந்த ஆசிரியர் விருது 2019 ‘ இதனை சிறப்பு விருந்தினரும், நிர்வாக அறங்காவலரும் பி. எஸ். ஜி யின் இந்நாள் ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் பி. எஸ். ஜி யின் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார்.
இதில் மூத்தோர் மற்றும் இளையோர் என இரு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பி. எஸ். ஜி யின் கல்வி நிறுவனங்களை சேர்த்த சுமார் 25 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த விருதினை பெற்றனர்.


இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான சிறப்பு விருந்தினரின் சிறப்புரையில் இன்றைய கால கட்டத்தில் வாழும் மனிதர்களுக்கு தேவைப்படுகின்ற அறிவுரைகளை தனக்கு பாடம் கற்று கொடுக்கின்ற நதியை மையப்படுத்தி இவரது உரையின் கருத்தை ரசிக்கும் படியாக நகைச்சுவையுடன் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் இறுதியாக மருத்துவமனை டீன் ராமலிங்கம் நன்றியுரையாற்றினார்.