என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரி 8 ஆவது பட்டமளிப்பு விழா

என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரி 8 ஆவது பட்டமளிப்பு விழா என். ஜி. பி. கலையரங்கில் நடைபெற்றது. சென்னை, இந்திய அரசு, பாதுகாப்புத் துறை அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐ.ஐ.டி.எம் ஆராய்ச்சி மையம், ‘ஜி’ எஃப்.ஏ.எஸ்.சி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நடராஜன்  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்கள்.

கே.எம்.சி.எச். தலைமை நிர்வாக இயக்குனர் புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். இவர் தற்காலத்தில் கல்வித்துறையில் உள்ள சவால்களைப் பற்றி விளக்கினார்கள். அதனைத் தொடர்ந்து என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பொற்குமரன் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.

என். ஜி. பி. கல்விக் குழுமங்களின் தலைவர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமையுரை ஆற்றினார். இவர்  பொறியியல் கருத்தாக்கங்களைச்‌ செயல் முறையில் கற்றுத் தங்களுக்கு உள்ள வாய்ப்பைப் பயன்படுத்துவது குறித்தும்  நல்ல வேலைவாய்ப்புக்குத் தேவையான  திறமைகளை வளர்த்துக் கொள்வது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் செயலர் தவமணி தேவி பழனிசாமி அவர்கள் பாராட்டுரை வழங்கினார். தம் உரையில் செயலர் அவர்கள் கல்வி ஒரு தொடர்ச்சியான செயல் என்பதாயும் அதனைப் பயன்படுத்தும் அறிவோடு கற்பதே ஏழை எளியோர் முன்னேற்றத்துக்கும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் துணை செய்யும் என்று குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் நடராஜன் சிறப்புரையாற்றினார். ஆற்றினார். அவர் தம் உரையில் விமர்சன சிந்தனை, அணுகுமுறை, உரையாடல், படைப்புத்திறன், புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவது, சீர்குலைக்கும் கண்டுபிடுப்புகளைத் தவிர்ப்பது குறித்தும்  கல்வி என்பது தொடர்ச்சியான செயல் என்றும் அது அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு  போன்றவற்றால் நிகழ்வது என்றும் வருங்கால இந்தியாவின் பொறுப்புமிக்க குடிமக்களாக மாணவர்களை பேராசிரியர்கள் வடிவமைக்க வேண்டும்  என்றும் தெரிவித்தார். மற்றும்  கல்வி தரத்தை மேம்படுத்தவும் மாணவர் நலத்தினைப் பேணி நல்ல பட்டதாரிகளைச்‌ சமூகத்திற்கு வழங்கக்  கல்லூரி எடுத்துள்ள முயற்சிகளையும் மிகவும் பாராட்டினார்.

இந்த எட்டாவது பட்டமளிப்பு விழாவில்  பல்கலைக்கழக  அளவில் 12  முதல் நிலையில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் உட்பட 485 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். அதில் 353 பட்டதாரிகள் உயிரியல் மருத்துவப் பொறியியல், கட்டிடப் பொறியியல், கணினி அறிவியல் பொறியியல், மின்னணு மற்றும் தொலைத் தொடர்புப் பொறியியல், மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல், தகவல் தொழில்நுட்பவியல், மற்றும் இயந்திரப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் பெற்றனர். 132 பட்டதாரிகள் தொழில்  நிர்வாகம், கணினிப் பயன்பாடு, கணினி அறிவியல் பொறியியல், உட்பொதிக்கப்பட்ட அமைப்பு தொழில்நுட்பம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் ஆற்றல் மின்னணுவியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றனர்.