அரபு நாடுகள் போன்று உடனே தண்டனை வழங்க வேண்டும்: நடிகை திரிஷா

பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அரபு நாடுகள் போன்று உடனே தண்டனை வழங்க வேண்டும் என நடிகை திரிஷா வலியுறுத்தியுள்ளார்.

திரிசா 18 வருடங்களாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபகாலமாக பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அவர் இன்று சென்னை ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று  மாணவிகள் முன்னிலையில் உரையாற்றினார். அவர் பேசுகையில், சமூக வலைதளங்கள் மூலமாக குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நடிகர் திரிஷா கூறியுள்ளார்.

குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாணவிகளை திரிஷா வாழ்த்தி பாராட்டினார்.

தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித்குமார் எனவும், அஜித் போன்ற உச்சநட்சத்திரம் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததை வரவேற்பதாகவும் நடிகை திரிஷா தெரிவித்தார். ஏற்கனவே பல இடங்களில் நடிகை திரிசா எனக்கு பிடித்த நடிகர் அஜித் என்று கூறியிருப்பது குறிப்பிடதக்கது.