நான் ராசி இல்லாதவள் என்றனர்

தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2 மற்றும் கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்துள்ள டாப்சி இப்பொழுது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். அமிதாப்பச்சனுடன் நடித்து வசூல் குவித்த ‘பிங்க்’  படமானது இப்பொழுது தமிழில் அஜித் நடிக்க நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

சினிமா வாழ்கை குறித்து டாப்சி அளித்த பெட்டியில் “நான் சினிமாக்கு வந்த புதிதில் 2,3, தென் இந்திய படங்களில் நடித்துள்ளேன். அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. உடனே படக்குழுவினர் என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி விட்டனர். எனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவமாக அதை பார்க்கிறேன். கதை எழுதியது நான் இல்லை. படம் எடுத்ததும் நான் இல்லை. ஆனாலும் படம் ஓடாததற்கு என்மீது பழி போட்டனர். நான் நடித்து ஓடாத அந்த 3 படங்களிலும் மூன்று பாடல்கள் நாலைந்து காட்சிகளில்தான் நடித்து இருந்தேன். பெரிய தயாரிப்பாளர் பெரிய இயக்குனர் என்ற காரணத்தினால் அந்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த படங்களில் நடித்தது எனது தவறுதான். ஆனால் படங்கள் ஓடாததற்கு காரணம் நான் என்று பழியை என் மீது சுமத்தியது சரியல்ல. இந்தியில் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு போனேன். அங்கு என்னை ஆறாவது வரிசையில் உட்கார வைத்தனர். முன் வரிசையில் உட்கார அருகதை எனக்கு இல்லை என்று நினைத்தார்களோ என்று தெரியவில்லை. ஒரு இந்தி படத்தில் நடித்தபோது நீதான் மோசமான தேர்வு என்று இயக்குனர் திட்டினார். இதுதான் எனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள்.”

Sourced