பறவைகளின் அழிவை தடுக்க புதிய மையம்

ஆனைக்கட்டி பகுதியில் உள்ள சலீம் அலி மையம், பறவைகளுக்கு ஏற்படும் அபாயமான தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய பறவைகள் சூழல் நச்சுத்தன்மைக்கான தேசிய மையத்தை மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் திறந்து வைத்தார்.

பறவைகளின் தனித்தனி இனங்கள் ரசாயன கழிவுகளால் பாதிக்கப்படுவதை குறித்தும், தேவைப்பட்டால் இவை மக்களோடும் சமுகத்தோடும் கொண்டுள்ள தொடர்பு குறித்து இந்த மையம் ஆய்வு செய்யும். கடந்த சில காலமாக பறவைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து இனப்பெருக்க அளவு குறையும் நிலை தொர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான சுற்றுச்சூழல் காரணங்கள் குறித்து ஆய்வு செய்வது முக்கியத்துவம் வாய்ந்தாகும். அண்மைக்காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் 125 வகை பறவையினங்களின் சூழல் பாதிப்புத் தன்மை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சூழல் நச்சு இயல் ஆய்வில் வேதி பகுப்பாய்வு ஒருங்கிணைத்த ஒரு பகுதியாகும். உயிரியல் மற்றும் உயிரியல் சாராத வகையிலான ரசாயணங்களின் அளவை ஆய்வு செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.   சுற்றுசூழலில் தொடர்ச்சியாக, புதிய வேதிப்பெருட்கள் கலப்பதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஆய்வு செய்ய  சாக்கோனில் அதற்கான அதற்கான நவீன வசதிகளுக்கு மத்திய அரசின் சுற்றுசூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற துறை அமைச்சகம் 4 கோடி ருபாய் ஒதுக்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பகுப்பாய்வு வசதிகளுக்குப் பல நிறுவனங்கள் உள்ளபோதும், பறவைகளை மையமாகக் கொண்டு சூழல் நச்சு இயல் ஆராய்ச்சி செய்யும் ஒரே நிறுவனம் சாக்கோன் ஆகும்.

இந்த மையத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள், கனமான உலோகங்கள் போன்றவற்றின் ரசாயன அளவுகளையும் பறவைகளுக்குத் தீங்கு விளைவிற்கும் வேதியியல் பொருட்கள் மற்றும் சூழல் குறித்தும் ஆய்வு செய்ய இந்தக் கருவிகள் உதவும். இத்தகைய ஆய்வின் முடிவுகள் பறவைகள் மட்டுமல்லாமல் உயிரினகளையும் பாதுகாக்க உதவும்.