ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் புதிய பயிற்சி வகுப்புகள் துவக்கம்

கோயமுத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், ஜிஆர்ஜி சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் கோவையுடன் உடன் இணைந்து ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் இரண்டு ஆன்லைன் பயிற்சிகளுக்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது. புதிதாகத் துவக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் : 1. புரொபஷனல் சர்டிபிகேட் இன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அண்ட் அனலிடிக்ஸ் மற்றும் 2. புரொபஷனல் டிப்ளமோ இன் பிசினஸ் அனலிடிக்ஸ் ஆகிய இந்த பயிற்சிகளில், 85 சதவிகிதம் ஆன்லைன் மூலமாகவும் மீதி பாடங்கள் ஜிஆர்ஜி சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் கல்லூரியில் நேரடி வகுப்புகளாக நடைபெறும்.

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், தொழில் முனைவோர், இறுதியாண்டு இளநிலை மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். துவக்கவிழாவில் கோயமுத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் பிரசாந்த் சுப்ரமணியன் பேசுகையில், மாணவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தாங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்வதோடு தங்கள் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு கோயமுத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், அமைப்பு, ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் திட்டங்களை கோவைக்கு கொண்டுவருதில் முனைப்புடன் செயல்படுகிறது என்றார்.

ஜிஆர்ஜி சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் பாலசுப்ரமணியன் தனது வரவேற்புரையில் வருங்காலத்தில் பணிபுரிபவர்கள் பல திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் செயலாளர் நந்தினி ரங்கசாமி அவர்கள் பயிற்சிக்கான கையேட்டை வெளியிட்டார். அவர் பேசுகையில், கோயமுத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் மற்றும் ஜிஆர்ஜி சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இணைந்து பயிற்சி அளிப்பதன்மூலம் மாணவ மாணவியர் பயன்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார். ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் உதவி இயக்குநர் ராகுல் பாட்டியா அவர்கள் பயிற்சி வகுப்புகள் பற்றி விளக்கங்களை அளித்தார்.

பயிற்சியில் சேர விரும்புவோர் 75400 89111 அல்லது 97919 58401 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.