நல்ல ரூட்’ல போங்க தல

கல்லூரி வாழ்க்கை நம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. கல்லூரி நமக்கு கற்றுகொடுப்பது  வெறும் கல்வி மற்றும் இல்லை, நமது வாழ்வின் அடிப்படி கொள்கைகளையும் கற்று தருகிறது. சிலருக்கு இந்த கல்லூரி வாழக்கையில் ஒரு சிறந்த நட்பும், காதலும், பொறுப்புகளும், கடமைகளும் அதற்கான பெருமைகளும் கிடைக்கும் ஒரு இடமாக திகழ்கிறது.

அதில் நம் மாணவர்கள் கையில் எடுப்பது இவை அனைத்தும் இல்லாமல் புதிதாக ஒன்று. அது வன்முறை இவை அனைத்து கல்லுரிகளிலும் நடக்கும் ஒன்று. காரணம் இவர்கள் இளம்வயது. இது பயம் அறியாது, அதே போல் எதிர்காலத்தைபற்றி கவலை கொள்ளாத வயது. அதனால் இவர்கள் கையில் எடுப்பது ஆயுதம்.

கல்லூரியின் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.  நட்பு, காதல், நேரம் தவராமை, கடமை, கட்டுப்பாடு, தலைமை பொறுப்பு என்பவை தான் தவிர வன்முறை அல்ல. ரூட்டு  தல என்பவர் பேருந்துகள் செல்லும் வழித்தடங்களில் பயணிக்கும் இளைங்கர்கள் குழுவின் தலைவர்.

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் பொழுது போக்குக்காக தனி குழுவாக சேர்ந்து இயங்கிய ஒன்று. இந்த குழுகளின் தலைவர் தான்  “ருட்டு  தல”. இவர் தான் இந்த குழுவை வழிநடத்துவார். எதாவது பிரச்சனை வந்தால் இவர் தான் தலைமை ஏற்று அதனை சரி செய்வார். அது இன்று தன்னை பார்த்து பயப்பட வேண்டும் என்று   ரௌடிசம் என்ற ஒன்றுடன் கத்தியையும் கையிலெடுத்து கொண்டு வளம் வருகிறார்கள், அதுவும் கல்லுரிகளுக்குள். கல்லூரிக்கு எதற்கு கத்தி?. பாடம் படிக்கவா? அல்லது பாடம் புகட்டவா?. பாடம் புகட்ட நீ ஆசிரியரும் அல்ல. நீ அனுபவதில் பெரியவனும் அல்ல.

வருங்கால இந்தியாவாக கலாம் கண்ட கனவு இதுவல்ல. உனது வீரத்தை ஒருவனை அடித்து காயப்படுத்தி வெளிப்படுத்தாதே, உனது வீரத்தை அறிவின் வழியில் செயல்படுத்து. அதையும் மீறி உனக்கு ஒருவனை அடித்து காயப்படுத்தி தான் உன்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தால், நீ மாணவனும் அல்ல, மனிதனும் அல்ல, நீ இருக்க வேண்டிய இடம் இதுவும் அல்ல.

வன்மன் கொள் அது அநீதியை எதிர்த்து. ஆயுதம் எடு அது அறிவாக இருப்பது அனைவரும் நல்லது. ரத்தம் பார்க்கவேண்டும் என்று நினைத்தால் ராணுவத்தில் சேர். உனது வீரத்தையும் விவேகத்தியும் காட்ட வேண்டும் என்று நினைத்தால் காவல் துறையில் சேர்ந்து குற்றங்களுக்கு எதிராக சட்டத்தின் வழியில் செய், உன்னை யாவராலும் கேள்வி கேக்க முடியாது. இன்றைய இளைங்கர்களின் வீரம் ஒற்றுமையில் தான் இருக்கிறது, இதனை நன்மைக்காக பயன்படுத்த வேண்டும்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் முடிவு, இது தான் நாம் அறிந்த கருத்து, அதற்கு பதிலாக புத்தி எடுத்தவனுக்கு புத்தியால் தான் முடிவு என்று எதாவது கேள்விப்பட்டது உண்டா, கிடையாது. இதையும் மீறி நீ  ரௌடிசம் செய்வதால் உனக்கு என்ன பயன்?. அதை வைத்து உன்னால் எவ்வளவு நாள் நிலைத்து நிற்க முடுயும். உன்னை மிஞ்ச ஒருவன் வருவான். அவனை மிஞ்ச இன்னொருவன் வருவான். அதன் பின் உன் நிலை. கேள்வி குறி தான்?

இதனால் நீ பெற்றது என்ன? அல்லது நீ கற்றது என்ன? உனக்கு தெரிந்தால் சொல், நானும் முயற்சிக்கிறேன் உன் எண்ணத்தை மாற்ற.