தர்பார் VS நேர்கொண்ட பார்வை

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த மாதமே ஒரு சிறப்பான மாதமாக அமைந்து இருக்கிறது. காரணம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்களின் அடுத்த படத்தை பற்றின அடுத்தடுத்த அப்டேட்கள் தான்.

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் போஸ்டர் மற்றும் பாடல், அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல், கமலின் இந்தியன் 2 படத்தின் போஸ்டர் மற்றும் தலைவன் இருக்கிறான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார் என்ற அப்டேட், அதன் பிறகு தற்பொழுது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படக்குழுவினரிடம் இருந்து இன்று மாலை 6 மணிக்கு  இந்த பாடத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தர்பார் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் வெளியானதில் இருந்து இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை வெளியானதால் இன்று என்ன அப்டேட் வரும் என்றும் இது இந்த படத்தின் முக்கியமான அப்டேடாக இருக்கும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இதுமட்டுமல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தின் இன்னொரு அப்டேட் இன்று வெளியாகிறது. இது அஜித் மற்றும் ரஜினிக்கு நடக்கும் போட்டியல்ல, அஜித் ரசிகர்களுக்கு ரஜினி ரசிகர்களுக்கும் நடக்கும் போட்டியாக மற்ற ரசிகர்கள் வர்ணிக்கின்றனர்.  இந்த போட்டி ஏற்கனவே இதற்கு முன்னாள் விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படம்  ஒன்றாக வெளியாகி மிக பெரிய போட்டி போட்டது. அதே போல் இன்றும் போட்டி போட  இருக்கிறது.