“தன்னம்பிக்கையே மூலதனம்!”

“அறம் செய்ய விரும்பு” என்று ஔவையின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியாகக் கொடுக்கும் கல்விமுறை நம்முடையது. அதாவது ஆரம்பக் கல்வியையே அறநெறிக் கல்வியாகக் கொடுத்து நாற்றாங்கால் பருவத்திலேயே நன்னெறியை விதைக்கும் முழுமையான குருகுலக் கல்விமுறையில் இருந்து மாறி ஆங்கில கல்விமுறையில் “கி” யீஷீக்ஷீ கிஜீஜீறீமீ என்று சொல்லிக் கொடுக்கத் தொடங்கிய போதே நமது பண்பாடும் கலாச்சாரமும் தேயத் தொடங்கிவிட்டது. பண்பாடு இல்லாத கல்வி என்பது கரையில்லாத நதிக்கு சமமாகும். அதனால் ஆக்கத்தை விட அழிவுகளே அதிகம்.

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அரசியின் பிரதிநிதி, மெக்கலோ இந்தியாவில் 20 ஆண்டுகள் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1936-ல் தன்னுடைய அனுபவ அறிக்கையை, இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தான். அதில் “இந்தியத் திருநாட்டில் நெடுக்காகவும் குறுக்காகவும் இருபது ஆண்டுகள் பயணம் செய்து நேரில் பார்த்த போது, ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ, கொள்ளைக் காரர்களையோ பார்க்கவில்லை. ஏனென்றால், இந்தியமக்கள் அவர்களுடைய பாராம்பரிய கல்விமுறையாகிய குருகுலக் கல்வி யில் பயின்று, திருப்தியாகவும், மானுடப் பண்புகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் கல்விமுறையை மாற்றி, ஆங்கிலக் கல்வியை புகுத்துவதோடு, ஆங்கிலம் தான் சிறந்தமொழி என்ற மாயையை ஏற்படுத்தினால்தான், இந்தியர்களை எளிதில் அடக்கி ஆளமுடியும்“ என்று கூறினான்.

அதன் பின்னர், சிந்திக்கும் திறனைப் பெறாத அடிமைகளாக்கும் ஆங்கிலக்கல்வி முறை இந்தியாவில் புகுத்தப்பட்டது. அதனைப் பயின்று நம்மை நாமே தொலைத்து வருகின்றோம்.

அன்றாட தினசரிகளைப் பார்த்தால் புரியும், படிக்காதவர்களை விட படித்தவர்களே பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதைக் காண லாம். சமுதாய சேவைக்காக அரசாங்கப் பணியில் சேர்ந்தவர் களுக்கு நல்லசம்பளம் கொடுக்கப் பட்டாலும் ஊழலில் ஈடுபடுவதையும், அரசாங்கப் பணத்தை அபகரிப்பதையும் பார்க்கலாம்.

படித்த படிப்பு அறிவைக் கொடுத்ததே தவிர, அறநெறிகளை கற்றுக் கொடுக்க வில்லை. அறிவு சார்ந்த நூல்கள் பள்ளிகளில் போதிக்கப் பட்டதே தவிர அறம் சார்ந்த நூல்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்பதே காரணம் என்று கூறலாம். திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிநூல் போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டாலும் அவை மதிப்பெண் பெறுவதற்காக போதிக்கப்படுகிறது. அதையும் மாணவர்கள் சிலீஷீவீநீமீ ல் விட்டுவிடுகிறார்கள்.

முன்னர் இருந்த கூட்டுக் குடும்ப முறையில், தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள், குழந்தைகளுக்கு அறநெறிக் கதைகள் மூலமாக சொல்லிக் கொடுத்துவந்தார்கள். ஆனால் தற்போதைய தனிக்கு டும்பமுறையிலும், வேலையின் காரணமாகவும், இதர காரணங்களாலும் தனித்து வாழும் பெற்றோர்களால், குழந்தைகளுக்கு அரிய வாய்ப்பை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.

ஆகவே, வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான அறிவுரைகள் கிடைக்கப் பெறாத குழந்தைகள், வெறும் புத்தக அறிவை வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாதையில் நன்கு பயணப்படமுடியாமல் விபத்துக்களில் சிக்குண்டு போகிறார் கள். உதாரணமாக பல பட்டங்களைப் பெற்று உயர்பதவியில் கைநிறைய சம்பாதிக்கும் இளம் தம்பதியர் குடும்பத்தை நடத்த முடியாமலும், ஒன்றாகச் சேர்ந்து வாழமுடியாமலும் விவாகரத்து செய்து கொள்வதைப் பார்க்கிறோம்.

பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அந்தக் கால வாழ்க்கையைப் போல, “கல்லானாலும் கணவன், புல்லானும் புருஷன்” என்று கண்மூடித்தனமாக வாழச் சொல்லவில்லை. ஒருவருடைய குணாதியங்களை மற்றவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழவேண்டும் என்று தான் சொல்கிறேன். மேலும், பரஸ் பரம் குறைநிறைகளை உணர்ந்து அவற்றைச் சரிசெய்து கொண்டு வாழ்க்கையெனும் சோலையிலே வசந்தமலர் பறிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

எல்லோரிடமும் குறைகள் இருக்கும் அதைப் பெரிது படுத்தாமல், அவரவர் குறைகளை அவரவர்கள் உணர்ந்து திருத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்க வேண்டும். சின்ன சின்ன தவறுகளைக் குத்திக் கொதறி பெரிதாக்கி வாழ்க்கையை சிதைத்து விடக்கூடாது. வாழ்க்கையென்கிற பயணம் இனிதாக அமைய இருவரும் இதயத்தால் இணைய வேண்டும். “குற்றம் பார்க்கின் சுற்றமில்லை” என்பது நமது பழமொழி.

எதற்காக இதையெல்லாம், இந்தக் கட்டுரையில் சொல்கிறேன் என்று நினைக்கின்றீர்களா? அதாவது வகுப்பறைப் பாடம் வாழ்க்கையை நடத்துவதற்குப் போதாது என்பதை புரிய வைக்கத்தான் இந்த முயற்சி.

வாழ்க்கையை செம்மை படுத்துவதற்கு உதவும் வகையில், நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பல ஊர்களில் தன்னம்பிக்கைப் பயிலரங்குகளை நடத்தி வருகின்றேன். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

சமீபத்தில், தன்னம்பிக்கைப் பயிலரங்கம் திருப்பூரில் நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, மெஜெஸ்டிக் கான்வென்டின் தாளாளர் அன்புத்தம்பி சாரதி தியாகராஜன் அவர்கள் பெரிய அளவில் ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய தந்தையார் திரு. எம்.தியாகராஜன் அவர்கள் சிந்தனையாளர், திரு.இல.செ.கந்த சாமி அவருடைய அறிவுரைகளில் வளர்ந்து பின்னர் எனது நட்பில் இணைந்து வளர்ந்தவர். அவர் சென்ற ஆண்டு இயற்கை எய்தி பேரிழப்பை எங்களுடைய நட்பிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏற்படுத்தி விட்டார்.

“சில நல்ல மனிதர்களை வாழ்க்கையில் சந்திக்கும்போது வாழ்த்த முடிவதில்லை, வணங்கத் தான் முடிகிறது” என்பார் திரு. இல.செ.கந்தசாமி அவர்கள். அவரு டைய வார்த்தைகளை மெய்ப்பித்தவர் தான் திரு. தியாகராஜன் அவர்கள். கடந்த இருபது ஆண்டுகாலமாக, ஆண்டு ஒன்றுக்கு இருமுறையாவது தனது சொந்த செலவில், சொந்த பொறுப்பில் தன்னம்பிக்கைப் பயிலரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தி விடுவார். தான் இலட்சியத்தில் எள்ளவும் குறையில்லாமல், நிதி பற்றாக்குறை வந்தபோது பின்வாங்காமல் கடன்பட்டாவது அதை வெற்றிகரமாக நடத்தி விடுவார். திருப்பூர் சென்றபோதெல்லாம், என்னைச் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்து நேரம் கேட்பார்கள். ஆனால் நான் விரும்பி சந்திக்கும் மனிதர்களில், திரு. தியாகராஜன் அவர்களும், திரு.சிவக்குமார் அவர்களும் முதன்மையானவர்கள்.

02.07.2017 ந்தேதி நடைபெற்ற தன்னம்பிக்கைப் பயிலரங்கை, அமரர் திரு. எம். தியாகராஜன் அவர்களின் நினைவாக நடத்தினார் அவருடைய புதல்வர் திரு சாரதி. திரு. தியாகராஜனின் துணைவியார் திருமதி.சம்பூர்ணம், மகள் விஜய லட்சுமி, மருமகன் செந்தில் குமார் ஆகியோரும், அவர்கள் நடத்தும் பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்களும், பொது மக்களும் எனது இனிய நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.அத்துடன் எனது அருமை நண்பரும், திருப்பூர் மாநகரின் காவல் துணை ஆணையர் திரு. ஆர். சின்னசாமி இ.கா.ப அவர் களும் கலந்து கொண்டு நல்லுரை வழங்கினார்.தன்னம்பிக்கையுடன் முயன்றால் சாதாரண மனிதனும் சாதனை யாளனாக மாறமுடியும். ஆகவே, மற்றவர்களுக்கு நம்பிக்கை யூட்டும் விதமாக உங்களுடைய சொற் களும் செயல்களும் அமையட்டும்.

– (மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.)