கோவையில் சர்வதேச மயக்கவியல் கருத்தரங்கம்

மயக்கவியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் வரும் ஜூலை 4ம் தேதி கோவையில் ” அகாடமி ஆப் ரீஜினல் அனஸ்தீசியா ஆப் இந்தியா ” அமைப்பின் சார்பில் நடக்கிறது. இந்த அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் பால வெங்கடசுப்ரமணியன் அவர்கள், அறுவை சிகிச்சையின் போது மயக்கவியல் துறையின் பங்கு மிகவும் முக்கியமானது.

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு முதுகுத் தண்டுவடத்தில் ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்படும் அல்லது முழு மயக்க நிலையடையும் செயல் முறை இருந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மயக்கவியல் துறை டாக்டர்கள் அனைவரும் இந்த முறையை தான் தற்போது பின்பற்றுகிறார்கள்.

ஆனால், மயக்கவியல் துறையில் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.

மயக்கவியல் துறைக்கு, ரேடியாலஜி துறையால் அல்ட்ராசவுண்ட் முறை, பெரிதும் உதவுகின்றது. இதன் மூலம் அடிபட்ட இடத்தை கண்டறிந்து அவ்விடத்துக்கு செல்லும் நரம்புகளில் சிறியளவில் மயக்க மருந்து செலுத்தினால் அவ்விடத்தில் வலி இருக்காது. இதன்மூலம் அறுவை சிகிச்சையை விரைவில் முடிப்பதுடன், நோயாளிக்கும் விரைவில் தீர்வு கிடைக்கிறது.

இந்த நவீன தொழில்நுட்பம் குறித்து, டாக்டர்களிடம் கொண்டு செல்ல கோவையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, பெல்ஜியத்தை சேர்ந்த 30 டாக்டர்கள் மற்றும் நம் நாட்டை சேர்ந்த 150 டாக்டர்கள் என 180 பேர் இந்த கருத்தரங்கில் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இதில், 35 நாடுகளை சேர்ந்த 1,500 டாக்டர்கள் பங்கு பெற உள்ளனர். ஜூலை , 4 முதல்  7ம் தேதி வரை நான்கு நாட்கள் கோவை லீமெரிடியன் ஓட்டலில் நடக்க உள்ளது என அவர் கூறினார்.