கே.பி.ஆர் கல்லூரியில் தேசிய அறிவியல் கண்காட்சி

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் நடத்தும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் கண்காட்சி இன்று தொடங்கியது. இத்தொடக்க விழாவை LMWயின் முத்த துணைத் தலைவர் வேணுகோபால் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி ஜூன் 28 மற்றும் 29 ல் நடைபெறுகிறது. இதில் 100 பள்ளிகள் கலந்து கொண்டு 600 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி 5 வகையான தலைப்புகளில் நடைபெறுகிறது.

இது 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும்,11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர்.