பரிதாப நிலையில் உள்ள நூலகம்

உலகம் டிஜிட்டல் மயமானதால் நூலகத்துக்குச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போனாலும், கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நூலகங்களுக்குச் செல்கின்றனர்.

அன்றைய காலத்து கூகுள், நூலகங்கள் தான். நீலகிரி மாவட்ட கொலக்கொம்பை கிளை நூலகம் அதற்கும் மேல் 30 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நூலகம் ஒழுகும் மேற்கூரை, எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் பாழடைந்த கட்டடம், மழையில் ஊறிய புத்தகங்கள் எனப் பரிதாப நிலையில் செயல்பட்டுவருகிறது.

நீலகிரியில் 57 கிளை நூலகங்கள், 23 கிராமப்புற நூலகம் மற்றும் 19 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இவை அனைத்தும் ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. நூலகர் மற்றும் உதவியாளர் என சுமார் 150 பேர் பணியில் உள்ளனர். நீலகிரியில் பெரும்பாலான நூலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.மேற்கூரை சீரமைக்கப்படாததால் ஒவ்வொரு மழைக்கும் பல நூறு புத்தகங்கள் சேதமடைகின்றன. அலமாரி பற்றக்குறை காரணமாகப் புத்தகங்களை தரையிலும், மூட்டையிலும் கட்டி வைத்துள்ளனர்.கொலக்கொம்பை மட்டுமல்லாது நீலகிரியில் உள்ள பல கிராமப்புற, கிளை நூலகங்களில் இடப் பற்றாக்குறையால் அரிய பொக்கிஷமான பல நூல்கள் மூட்டைகளில் கட்டப்பட்டு செல்லரித்து வீணாகிறது.

இதன் இன்றைய நிலை இது நூலகமா என்று யோசிக்கும் அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

Source : https://bit.ly/2YhR9Na