திருவள்ளுவர் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் – ராமதுரை முருகன்

மேட்டுப்பாளையம் அடுத்த  கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் புத்தக திருவிழா பள்ளியின் செயலாளர் சிந்தனை கவிஞர் கவிதாசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்புரையாற்றினார், இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு புத்தக திருவிழா அரங்கத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் புத்தகம் நம்மை அடுத்த நிலைக்கு மாற்றி அமைக்கும், 2000 ஆண்டுகள் பின்பும் திருவள்ளுவர் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதற்கு காரணம் புத்தகம் தான்,உயர்ந்த சிந்தனை, சமுதாய சிந்தனை வளர்க்க புத்தகம் மிகவும் முக்கியமானது. புத்தகம் என்றும் நமக்கு ஒரு உற்ற நண்பனாக இருக்கும் என்று அவர் பேசினார்.

பள்ளியின் செயலாளர் கவிதாசன் பேசுகையில் 3 வீதமான கல்வி கொள்கை நமது நாட்டில் உள்ளது, தேர்வுக்கான கல்வி, வேலைக்கான கல்வி, வாழ்க்கைக்கான கல்வி, காந்தியடிகள் கூறினார் செய் அல்லது செத்து மடி என்று, அப்துல் கலாம் கூறினார் நான் திரும்ப திரும்ப படித்தேன் அதனால் தான் குடியரசு தலைவராக முடிந்தது என்று அவர் பேசினார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார்  ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பயிலும் லட்சுமி பிரியா என்னும் மாணவி கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்து வந்தார் அவருக்கும் உதவும் வகையில் சச்சிதானந்த பள்ளி மாணவ மாணவிகள் ரூபாய் 20000 காசோலையை மாணவியிடம் பள்ளியின் தலைமை மாணவரும் தலைமை மாணவியும் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன் மற்றும் துணை முதல்வர் சக்திவேல் வாழ்த்துரையாற்றினார்.