கூகுள் பே நிறுவனத்திற்கு 24 மணிநேரம் கெடு! – ஆர்.பி.ஐ

இந்தியளவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் பணத்தின் தேவை மற்றும் இருப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தினால் மக்கள் அனைவரும் இணையதள பணபரிவர்தனை மூலமாகவும், எளிதாகவும், விரைவில் பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய, கூகுள் பே, போன் பெ, பேடியம், அமேசான் பே என பல செயலிகளை உபயோகித்து வருகின்றனர்.

ஆன்லைன் பணப்பரிவர்தனையை மக்கள் எளிதாக மேற்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம், ஓலா நிறுவனம், உபேர் நிறுவனம், அமேசான் உள்ளிட்ட முன்னணி நிறுவங்கங்கள் ” மொபைல் செயலியை ” அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த செயலிகளின் பயன்பாடு மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கூகுள் பே (GOOGLE PAY ), அமேசான் பே (AMAZON PAY), உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பணப்பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை வெளிநாடுகளில் சேமித்து வைத்து வருகின்றனர்.

இதனால், இந்தியர்களின் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. இது தொடர்பான நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தால், அந்த தகவல்களை வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமித்து வைக்கக் கூடாது என்றும் இந்தியாவில் தான் சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வாங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் தகவல் சேமிப்பு விவகாரத்தில் கூகுள் பே மற்றும் அமேசான் பே நிறுவனங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.