தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் தற்பொழுது பள்ளிகள் துவங்கி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகின்றன. ஆரம்ப கல்வி, தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மேல்நிலை கல்வி, உயர்நிலை கல்வி என உள்ளன. இதில், தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் செய்ய கல்வி கட்டண நிர்ணயக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குழுவால் அங்கீகாரம் பெற்ற மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது.

இதற்கான பட்டியல் www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் விடுபட்ட பள்ளிகளை கணக்கில் கொண்டு பட்டியலை தயார் செய்து, அந்த பள்ளிகள் கட்டண நிர்ணய குழுவினரை சந்தித்து கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி கட்டண நிர்ணய பட்டியலில் இல்லாத பள்ளிகளின் பெயர்களை பட்டியலாக தயாரித்தும், அந்த பள்ளிகள் ஒரு மாத காலத்திற்குள் கட்டண நிர்ணயக்குழுவை நேரில் சந்தித்து கட்டண நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும் என அறிவித்தார்.