சிங்கப்பூரில் பாடும் புறா

பாட்டு பாடும் பறவை என்றால் அது குயில் தான், ஆனால் புறாவும் பாட்டு பாடும் என்றால் நம்ப முடியுமா?. அது மட்டும் இல்லாமல் சிங்கப்பூரில் புறாக்களுக்கான பாட்டு போட்டி நடத்தியுள்ளார்கள்.

இந்த போட்டியில் 150 பேர் தங்கள் வளர்த்த புறாக்களை கொண்டு வந்தனர். இது பார்வையாளர்களுக்கு செவி விருந்தாக அமைந்தது.

ஒரு மைதானத்தில் உயரமான கம்பத்தின் மீது வைக்கப்பட்ட கூண்டில் கருப்பு மற்றும்  வெள்ளை நிறம் கொண்ட மெர்பொக் புறாக்கள் அடைக்கப்பட்டன.

இதில் இனிமையான சத்தம் எழுப்பிய புறாவின் உரிமையாளருக்கு கோப்பை வழங்கப்பட்டது. 4 மணி நேரம் நடந்த இந்த போட்டியில், பறவைகளின் சத்தம் மனிதர்கள் பாடுவது போல மிகவும் இனிமையாக இருந்ததாக பார்வையாளர்கள் கூறினர்.