எஸ்.வி.எஸ் கல்லூரியில் கின்னஸ் சாதனை முயற்சி

கோவை எஸ்.வி.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 17.07.2017 அன்று 3 ஆம் ஆண்டு கணினி பொறியியல் மாணவர்  டென்னித் ஆதித்யாவின் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது. இவர் இதுவரை 19 கண்டுபிடிப்புகள், 14 சர்வதேச விருதுகளையும், 9 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரின் புதிய முயற்சியாக, ஒரு மாபெரும் வார்த்தை கொண்ட கணினி விளையாட்டை உருவாக்கியுள்ளார்.  இந்த விளையாட்டு தலைப்பு ‘இடைவெளியில்லாமல்”  132 எழுத்துக்களை கொண்டுள்ளது.

இது வரலாற்றில் உள்ள சண்டை வகையை கொண்டது. இயல்பான உளவுத்துறை சைபர்கோள்களை, சைபர் உலகில் நெருக்கமாகப் போரில் 24 வீரர்கள் என இந்த சைபர் விளையாட்டு விரிந்து கொண்டே செல்கிறது. இவருடைய இந்த முயற்சி கின்னஸ் உலகத்தில் தொடக்க நிலையில் உள்ளது.

இந்நிகழ்ச்சியில்  எஸ்.சந்திரசேகரன், நிறுவனர் மற்றும் தலைவர்,பி.ராகவேந்திரன், துணைத்தலைவர்,  த. கண்ணன்,முதல்வர், எஸ்விஎஸ் கல்லூரி மற்றும் கின்னஸ் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.