புதுரூபத்தில் பிரதமர் மோடி !

குழந்தைகளில் மிகவும் விரும்பும் ரூபத்தில் பிரதமர் மோடி வலம் வருகிறார். அதாவது மோடியின் உருவம் போன்ற கார்ட்டூன் தயார் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்  பல்வேறு யோகாசனங்களை செய்வது போன்ற அனிமேஷன் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெற்று பல்வேறு நன்மைகள் விளையும் என பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல், சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவதளத்தில் பாதுகாப்புபடை வீரர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 ராணுவ வீரர்கள் பங்கேற்று பல விதமான யோகாசனங்களை செய்தனர்.