இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Revolt RV 400 என்ற இந்த எலக்ட்ரில் மோட்டார்சைக்கிளில் இதுவரை இல்லாத என்னற்ற வசதிகள், கலக்கல் டிசைன், கட்டுமஸ்தான வடிவமைப்பு, பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்.ஈ.டி முகப்பு விளக்கு என அசத்தல் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. சமீபத்திய பைக் மாடல்களுக்கு சவால்விடும் வகையிலான ஸ்போர்டி வடிவமைப்பில் கச்சிதமான தோற்றத்திலும் இந்த பைக் வெளிவர உள்ளது.

இது எலக்ட்ரிக் பைக் என்றாலும் கூட அசவுகரியமான எண்ணம் ஏற்படுவதை தடுக்க இயல்பான பெட்ரோல் டேங்க் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

எல்.சி.டி இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், சாவிக்கு பதிலாக ஆன்/ஆஃப் ஸ்விட்ச் இடம்பெற்றுள்ளது, பைக்கை ஸ்மார்ட் ஃபோன் ஆப் வாயிலாகவும் ஆன் செய்துகொள்ளலாம் என்பது சிறப்பாகும். மேலும் வாகனத்தில் பல்வேறு செயல்பாடுகளையும் இந்த ஆப் வாயிலாகவே இயக்கிக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக இந்த பைக் காணப்படுகிறது.

இந்த பைக்கில் சைலன்ஸர் இல்லாத குறையை ஸ்பீக்கர்கள் போக்குகின்றன. Revolt ஆப்பின் மூலம் பலவிதமான இஞ்சின் சப்தங்களை தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொண்டால் ஸ்பீக்கர் மூலம் இஞ்சின் சப்தம் வெளிப்படுகிறது. இந்த வசதி இளைஞர்களை பரவசப்படும் என நிச்சயம் நம்பலாம்.

இதன் பேட்டரி 4 மணி நேர சார்ஜில் முழுமையான திறனை எட்டிவிடும். இதன் மூலம் 156 கிமீ பயணிக்கலாம். ஃபோர்டபிள் சார்ஜிங் வசதி உள்ளது. பொதுவாக நமது வீடு/அலுவலகங்களில் உள்ள 15 ஆம்ஸ் சாக்கெட் மூலமே சார்ஜ் செய்துகொள்ளலாம். இதன் பேட்டரி திறன் மற்றும் மோட்டார் அவுட்புட் போன்ற தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை.

இந்த RV 400 மோட்டார்சைக்கிள்கள் ஹரியானாவின் மனேசரில் உள்ள Revolt நிறுவன தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையின் தற்போதைய திறன் ஆண்டுக்கு 1,20,000 யூனிட்டுகள் என்ற அளவில் உள்ளது.

இந்த பைக்கின் விலை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் என ரிவோல்ட் நிறுவனம் கூறியுள்ளது.

Source : news 7