கல்வி வளர்ச்சி நாள் விழா

மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த  ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில்,  கர்மவீரர் காமராஜரின் 115ஆம் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

ம. சிவக்குமார்,  முனைவர், தமிழாசிரியர், வரவேர்புரையாற்றினார். கே. எஸ். சேஷகுமார், வணிகவியல் ஆசிரியர், காமராஜர்  பற்றிய வாழ்த்துப் பாடல் இசைத்தார்.

மாணவிகள், தி.தீபா, சு. நமீதா,  பா. ஸ்ரீநித்யா  மாணவர் சீ. ஆதர்ஷ், வி. விஜயகுமார், இந்தி ஆசிரியர் மற்றும் மகிளா,ஆங்கில ஆசிரியை ஆகியோர் காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிய கலந்துரையாடல் நிகழ்த்தினர்.

விழாவில், பள்ளி முதல்வர் இரா. உமாமகேஸ்வரி, பள்ளி முதல்வர், சு. சக்திவேலு, முனைவர், பள்ளி துணை முதல்வர் , நல்லாசிரியர் வெ. கணேசன், கல்வி ஆலோசகர் ஆகியோர் காமராஜரின் சிறப்புகளைப் போற்றும் வகையில்  உரையாற்றினர்.

மு. ஞானபண்டிதன், பள்ளித் துணைச் செயலர், தனது உரையில், ‘‘படிக்காத மேதையாக விளங்கிய கர்மவீரர் காமராஜர் முதல்வர் பதவியில் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தனக்கு இருந்த அதிகாரத்தினை ஒருபோதும் தன் நலனுக்காகப் பயன்படுத்தாதவர். நாட்டுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மாமேதை. அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு கதையாக மாணவர்கள் எண்ணிவிடாமல், நம் நாட்டுக்காக உழைத்த மாமனிதரின் வரலாறாக மனதில் எண்ணிப் போற்ற வேண்டும். காந்தியடிகளைப் பற்றி ஐன்ஸ்டின், ‘வருங்கால சந்ததியினர் காந்தி என்ற மகான் உயிருடன் மனிதராக வாழ்ந்த நிகழ்வை நம்புவார்களா என்பது சந்தேகமே. ஏனென்றால், காந்தியடிகளின் வாழ்க்கை, உண்மைக்கும் அப்பார்ப்பட்ட உயரிய வழ்க்கையாகும்’ என்று கூறியது அப்படியே கர்ம வீரர் காமராஜருக்கும் பொருந்தும்.  அவர் காட்டிய வழியில் கல்வியறிவில் சிறந்து விளங்குவதுதான் மாணவர்கள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்’’ என்று பேசினார்.

தட்சிணாமூர்த்தி, ஆங்கில ஆசிரியர், நன்றி கூறினார்.    பொ. சங்கர், தமிழாசிரியர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் செய்திருந்தார்.