சாதிக்க நினைக்கும் ஆர் ஜே லாவண்யா

பெண்கள் உலகம் எப்போதும் தனித்துவம் வாய்ந்துதான் இருக்கும். தனக்கு பிடிச்ச விஷயத்தை காண்பிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவரகளின் திறமை ரொம்பவே அழகாக இருக்கும். பெண்ணுக்கு மிக பெரிய அழகு அவர்களின் குரல் வளம்தான்.  கோபமா பேசினாலும் சரி, அன்பாக பேசினாலும் சரி, எந்த ஒரு தருணத்திலும் ஒரு தனிப்பட்ட அழகை நம்மால் உணர முடியும்.

ரொம்ப நாட்களாக வானொலியில் பாட்டு கேட்பது பழக்கம் ஆனாலும் கடந்த சில வருடங்களாக வானொலி நிகழ்ச்சி மேல் ஒரு ஈர்ப்பு வராமல் இருந்த தருணம்.

பிறகு இளம் சமுதாயம் அதன் மீது அக்கறை செலுத்த தொடங்கிய உடன் வானொலியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் மீது ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் குவிய ஆரம்பித்தது என்று சொல்லலாம். கோவை ரேடியோ மிர்ச்சி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆர் ஜே லாவண்யாவை நாங்கள் சந்தித்த போது பல ஸ்வாரஸ்யமான வாழ்க்கை பாடத்தை பற்றி எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அதை இப்பொழுது காண்போம்.

ஹாய் வணக்கம் நான்தான் உங்கள் வீட்டு செல்ல பொண்ணு ஆர் ஜே லாவண்யா, ரேடியோ மிர்ச்சில கோலி சோடா நிகழ்ச்சி மூலமா நீங்க எல்லோரும் என்னோட குரல கேட்டு இருப்பீங்க. என்னை பத்தி சொல்லனும்னா நிறைய இருக்கு இருந்தாலும் சில விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்க்கை எல்லோருக்கும் போல எனக்கும் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு இருந்தாலும் எனக்குள் இருக்கும் திறமை என்ன என்று எனக்கு தெரியாமல் இருந்தகாலம். அப்பொழுது நான் படித்த கல்லூரியில் மற்றும் பள்ளியியில் நான் பேசுவதை கண்டு எல்லாரும் ரசிப்பார்கள். அதற்கு காரணம் என்ன என்று எனக்கு தெரியாது. சிறிது காலம் கழித்து எனக்கு ஆர் ஜே ஆக வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. அப்பொழுது என் கல்லூரி ஆசிரியர்கள் என்னை ஊக்கப்படுத்தி என்னை ஆர் ஜே ஆக வேண்டும் என்று என் மனதில் ஒரு விதையை விதைத்தார்கள்.

பிறகு எனக்கு ஆர் ஜே ஆக வேண்டும் என்று வாயுப்பு கிடைத்த உடன் என் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. இந்த களத்தில் நாம் வெற்றி பெருவோமா இல்லையா என்று,

எனக்குன்னு ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி பன்னும்போது மக்களின் உண்மையான உணர்வுகளை என்னால் உணர முடிந்தது. ஒரு குட்டி உலகத்தை நாலு செவுத்துக்குள் இருக்கும் மைக் என்னை உணர வைத்தது என்று கூட சொல்லாம். ஏதோ ஒரு படிப்பு படித்து விட்டு பிடிக்காத வேலை பார்க்கும் அனைவருக்கும் நான் சொல்ல வருவது ஒரே விஷயம்தான் பிடிச்ச விஷயத்தை செய்யுங்க, உங்களை நீங்களே யார் என்று தெரிந்து கொள்ளும் சூழல்கள் ஏற்படும்.

ஒரு நாள் என் நிகழ்ச்சியில் சில்லறை தட்டுப்பாட்டை பற்றி பேசி கொண்டு இருந்தேன். சரியாக சில்லறை நாம்தான் எடுத்து கொண்டு போக வேண்டும் இல்லை என்றால் பேருந்து நடத்துனர் நம்மளை வயது வித்தயாசம் பார்க்காமல் நடுவில் இறக்கி விடுவார் என்று ஒரு கருத்தை என் நிகழ்ச்சியில் மூலமாக தெரிவித்தேன்.  இதை ஓடும் பேருந்தில் இருக்கும் நடத்துனர் கேட்டு கொண்டு இருந்திருக்கிறார். என் கருத்தை வானொலியில் கேட்ட உடன் அங்கு இருக்கும் பயணிகளுக்கு சரியாக சில்லறை கொடுத்து இருக்கிறார். அந்த பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்த ஒரு சின்ன பையன் எனக்கு தொலைபேசி மூலமாக அழைத்து, அக்கா கோபமா இருக்கும் ஒரு நடத்துனரை கூட உங்கள் கருத்து மாற்றி விட்டது என்று சொன்னான். அந்த நிமிடம் என்ன வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்று சொல்லலாம்.

பெண்ணாக நாம் சாதிக்க பல உலகம் காத்து கொண்டு இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டு என் வானொலி நிகழ்ச்சி பயணத்தை இன்னும் பல சாதனை படிகட்டுகளை எட்டி பிடிப்பேன் நம்பிக்கையோடு என் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. வா தோழி சாதிக்கும் உலகம் காத்து கொண்டு இருக்கு என்று சொல்லி கொண்டு விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

– பாண்டிய ராஜ்.