`குளத்தங்கரை அரசமரம்’ – வ.வே.சு.ஐயர்

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு உறங்கும் முன் கதை கேற்கும் பழக்கம் இருந்தது, அந்த கதைகளில் பலவகை உள்ளது. “சொல்கதைகள், பழங்கதைகள், தொன்மக்கதைகள், பாட்டி சொன்ன கதைகள், விடுகதைகள், நெடுங்கதைகள், குட்டிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதைராமன் கதைகள், ஆயிரத்தோர் இரவுக்கதைகள்” என, விதவிதமான வடிவங்களில் மனிதச் சமூகம் காலம்காலமாகக் கதை சொல்லிவந்திருக்கிறது. இப்பொழுது அது ” சின்சான், டோரா புச்சி ” என பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில் கதைகளுக்கு என்று ஒரு வரைமுறை மற்றும் வடிவமைப்பை கொண்டு படிக்கச் பட்டது தான் சிறுகதை. எல்லாவற்றிக்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும், அதே போல் தான் இந்த “சிறு கதைகள்” முதன் முதலில் இதற்கென ஒரு வடிவம் பெற்று வெளிவந்ததற்கு காரணம் வ.வே.சு.ஐயர் தான்.

சிறுகதைகளுக்கான வரைமுறைகள், இதனை படிக்கச் ஆரம்பித்தாள் முடித்துவிட்டுத்தான் எழுந்திரிக்க வேண்டும்.இது  கட்டளை இல்லை, கதை அந்த அளவில் எளிமையாகவும், புரியும் வண்ணமும் இருக்க வேண்டும். முதல் வரியிலேயே கதை ஆரம்பமாகிவிட வேண்டும். ஒரு பொருள் பற்றியதாகவோ, ஒரு மனோநிலை பற்றியதாகவோ ஒருமைகொண்டதாக அமைய வேண்டும்.இந்த வரைமுறைகள் படி பார்த்தால் வ.வே.சு.ஐயர் கதைகள் மற்றவைகளை விட மேலோங்கி இருக்கிறது.

இவர் ‘மங்கையற்கரசியின் காதல்’, `காங்கேயன்’, `கமல விஜயம்’, `ழேன் ழக்கே’, `குளத்தங்கரை அரசமரம்’ என 5 சிறுகதை தொகுப்புகளை வழங்கியுள்ளார்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சிக்குப் பிறகு தான்  சிறுகதை உருவானது. நீண்ட நேரம் அமர்ந்து வாசிக்க வாய்ப்பின்றி ஓடும் வாழ்க்கையில், போகிறபோக்கில் வாசித்துவிடக்கூடியதாக சிறுகதைகள் பிறப்பெடுத்தன. இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்துக்கொண்டிருந்த நாளில்தான் சிறுகதை பிறந்தது.

இவர் சிறுகதை எழுத்தாளர் மட்டும் இல்லை, இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர், அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவர்.

அப்படி சிறுகதைகள் வளர்வதற்கு ஊன்றுகோள் கொடுத்து எழுப்பி விட்ட வ.வே.சு.ஐயர் மறைந்த தினம் இன்று ( 04.06.2019 ). ஆனால் இன்றும் அரச மரம் போல் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறர்.