இளையநிலா SPB

தமிழ்நாட்டிகும் மூன்றெழுத்திற்கும் ஒரு பந்தம் இருக்கிறது போல, காரணம் M.S.V., M.G.R., சிவாஜி, ரஜினி, கமல்,விஜய்,அஜித்  என தமிழகம் அறிந்த பல பிரபலங்கள் மூன்றெழுதில் தான் இருக்கிறது. அந்த வரிசையில் இசைக்காக ஒருவர் இருக்கிறார்.

இசை என்றும் ரசிக்கக்கூடிய ஒன்றாக என்றும் இருக்கிறது. வெறும் இசையை மட்டும் தனியே கேற்பது விட ஒரு குரலோடு கேற்பது என்பது இன்னும் ஒரு தனி சுவையை கொடுக்கும். அப்படி இசை பெற்றெடுத்த தனது இளைய மகன்தான் SPB, இவர் பின்னனி குரலில் அசைக்க முடியாத துணாக வலம் வருகிறார். இவர் ஜூன் 4,1946 ல் ஆந்திரா, நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது தாய் மொழி தெலுங்கு, ஆனால் 4 தென்னக மொழிகளில் பாடியுள்ளார். சிறு வயதிலேயே பாடகராக வேண்டும் என்பதுதான் இவரது ஆசை, ஆனால் தனது தந்தையின் ஆசையால் பொறியியல் படிக்க சென்றார். அவருக்கு அங்கேயும் இசைதான் முதல் ஆர்வமாக இருந்தது. கல்லூரிகளில் நடக்கும் அனைத்து பாடல் போட்டிகளுக்கும் சென்றுவிடுவார், அது மட்டுமல்லாமல் பரிசும் பெற்றுவிடுவார்.

1979 இல் சங்கராபரணம் என்னும் தெலுங்கு  படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். ஆனால் இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்றவர் இல்லை. இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னனிப் பாடகர் இவர் ஒருவரே. தமிழில் இளையராஜா, SPB, ஜானகி ஆகியோரின் கூட்டணியில் அமைந்த பாடல்கள் பெரிய அளவில் வரவேற்புப்பெற்றுள்ளது. மேடை அரங்கில் ஆரம்பித்த பயணம் M.G.R., சிவாஜி உடன் திரையில் தொடங்கி, இன்று சிவாஜியின் பேரன் காலம் வந்து விட்டது, இப்பொழுதும் அவரின் குரலில் உள்ள கம்பிரமும், மென்மையும் மறையவில்லை, அவரது இசை தாகமும்  தீரவில்லை. இவர் இதுவரை 6 தேசிய விருதுகள்,கலைமாமணி, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் போன்ற விருதுகள் பெற்றுள்ளார். 40,000 பாடல்களுக்கு மேல் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இவரின் பாடல்களில் பல பாடல்கள்  இவர் குரலோடு மங்காமல் ஒலித்து கொண்டே இருக்கிறது.

” ஆயிரம் நிலவே வா ” என இவர்க்குரலில் ஒலித்த பாடல் இன்னும் எதிரொலித்து கொண்டே இருக்கிறது.மௌன ராகம் திரைப்படத்தில் “மன்றம் வந்த தென்றலுக்கு” பாடல் ஒரு புதுவித அனுபவத்தை தந்தது இவர் குரல் வழியே புன்னகை மன்னன் திரைப்படத்தில் “என்ன சத்தம் இந்த நேரம்” என்ற பாடல் இப்பொழுது வரை பலரின் உதடுகள் அசைவதற்கு காரணமாக இருக்கிறது, காரணம் அவரின் அந்த மயக்கும் குரல். அமர்க்களம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” என்ற பாடல் இன்று வரை பாடகர்களுக்கு  ஒரு சவாலாக உள்ளது. இதில் அவரின் குரல், கட்டுபடுத்திக் கொண்டிருந்த ஒருவனின் கோவம் எவ்வாறு வெளிப்படும் என்பதை அவர் குரலில் வெளிப்படுத்தினார் அப்படி ஒரு கதைக்களத்திற்கு பாடல் எந்த வகையில் இருக்க வேண்டுமோ அந்த வகையில் தன்னால் ஏவ்வாறு உதவ முடியுமோ அவ்வாறு அதனை செய்து முடித்தார்.

இவர் வெறும் பாடகர் மட்டும் இல்லை, பின்னனிப் பாடகர், பின்னணி பேசுபவர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் படைத்த இவர் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.

நான் ,

உங்களில் ஒருவன்.