கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி தொடக்கம்

கே.பி.ஆர் குழுமத்தால் நடத்தப்படும் கல்விநிறுவனங்கள் சார்பில் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை இந்த கல்வி ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கே.பி.ஆர்.குழுமம் 2009ஆம்  ஆண்டு கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை ஆரம்பித்து 10வருடங்களாக கல்வி வழங்கி வருகிறது. இப்பொது கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே அதிகம் வரவேற்பு இருப்பதாலும், வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைப்பதாலும், கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை தமிழக அரசின் அனுமதி பெற்று, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பி.காம், பி.காம் கணிணி அறிவியல், பி.பி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. கணிணி அறிவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கு தரமான கல்வியையும், சிறந்த பயிற்ச்சியையும், மேலும் மாணவர்கள் கல்வி பயிலும் போது பணி அனுபவம் பெறும் வகையில் கே.பி.ஆர்.குழுமத்தின் நிறுவனங்களிலும் மற்றும் பிற தொழில் நிறுவனங்களிலும் பயிற்சி அளித்து மாணவர்கள் படித்து முடிக்கும் போது பாட அறிவையும், வேலைக்கு தேவையான திறன் பயிற்ச்சியை வழங்கவும் திட்டமிடபட்டுள்ளது. கல்லூரியின் முதலாண்டு தொடக்கத்தை முன்னிட்டு கல்வி கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்டூ தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதலாமாண்டில் கல்விக்கட்டணம் இல்லாமல் அதாவது 100 சதவீதம் கல்வி கட்டண சலுகையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பருவத்திற்க்கு 5,000 மட்டும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது. மேலும் CA, ACS, ICWA மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்ச்சி வகுப்புகள் கல்லூரி வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரிக்கு கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து பேருந்து வசதியும், ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனியே தங்கும் விடுதியும் உள்ளது.