புகையிலை எதிர்த்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தெற்கு ரயில்வேயும் இணைந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால், மே 31 புகையிலை எதிர்ப்பு தினத்தில் கோவை ரயில் நிலையத்தில் புகைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வூட்டும் தெருக்கூத்து நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நாட்டு நலப்பணித் திட்ட மண்டல அலுவலர் சாமுவேல் செல்லையா வருகை புரிந்தார். மேலும் பாரதியார் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் தெற்கு ரயில்வேயின் துணை வணிக மேலாளர் லாரண்ஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் முதல்வர் மற்றும் செயலர் கருணாகரன் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தனர். மேலும் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புகைப் பிடித்தல் கூடாது என்ற உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.