பி.எஸ்.ஜி மருத்துவமனையில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு

ஆண்டுதோறும் மே  31 அன்று  புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது, அதே போல்  இந்த ஆண்டும் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சைத்துறையின் சார்பாக நோயாளிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

“புகை நமக்கு பகை” என்பதை பற்றிய  கருத்தரங்கம்  மற்றும்  புகை பழக்கத்திலிருந்து மீள  இலவச  ஆலோசனைகள்  மற்றும்  கையேடுகள் வழங்கப்பட்டன. புகையிலையினால்  ஏற்படும்  தீமைகள்  பற்றிய பிரத்யேக  புகைப்பட  கண்காட்சி  மருத்துவமனை  வளாகத்தில்   நடைபெற்றது.

இந்த  விழிப்புணர்வில்  பங்கேற்ற  பொதுமக்கள்  மற்றும்   நோயாளிகள் கண்காட்சியின்  முடிவில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் மருத்துவரின் முன்பு  புகை  பிடிப்பதை  விட்டு  விடுவோம்  என்று  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்ட  நுரையீரல் நல சிறப்பு பரிசோதனை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முழு உடல் பரிசோதனை போல நுரையீரல்  நல பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகள்  பற்றியும் அறிந்துகொண்டனர்.