ஜே.கே. டயர்ஸ் சார்பில் கார் மற்றும் சுசுகி ஜிக்சர் இருசக்கர வாகன போட்டி

கோவை, ஜே.கே.டயர்ஸ் சார்பில் கரி மோட்டர் ஸ்பீடு வே மைதானத்தில் தேசிய
அளவிலான கார் மற்றும் சுசுகி ஜிக்சர் இருசக்கர வாகன போட்டிகள் இன்று (9.7.17)
நடைபெற்றது. 4 பிரிவுகளில் கார் பந்தையமும், 2 பிரிவுகளில் இருசக்கர வாகன போட்டிகளும்
நடைபெற்றது.

எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தையத்தில் அவலான்சி ரேசிங் அணியை சேர்ந்த கோலாப்பூர் வீரர் சித்தேஷ் மண்டோடி முதலாவது இடத்தையும், மெக்கோ ரேசிங் அணியை சேர்ந்த சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் இரண்டாவது இடத்தையும்,டார்க் டான் அணியை சேர்ந்த சென்னை வீரர் சந்தீப் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஜே.கே. ரெட்புல் ரூக்கி கோப்பை இருசக்கர வாகன போட்டியில் ஜேடென் முதலிடத்தையும், வருண் 2வது இடத்தையும், லாகுரெய்சலா 3வது இடத்தையும் பிடித்தனர்.

3 வதாக நடைபெற்ற யூரோ ஜே.கே 17ன் 8வது போட்டியில் யூரோ இண்டர்நேசனல் அணியை சேர்ந்த தமிழக வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடத்தையும், கர்னாடகாவை சேர்ந்த ஆகாஷ் கவுடா 2வது இடத்தையும், தமிழக வீரர் விகாஷ் ஆனந்த் 3வது இடத்தையும் பிடித்தனர்.

4 வது போட்டியான யூரோ கப் 9 வது சுற்று போட்டியில் முதலிடத்தை சித்தேஷ் மண்டோடி முதலிடத்தையும்,விஷ்ணு பிரசாத் 2 வது இடத்தையும்,சரண் விக்ரம் 3 வது இடத்தையும் பிடித்து அசத்தினர்.

 

ஜே.கே.டயர் சுசிகி ஜிக்சர் இருசக்கர வாகன போட்டி கோப்பைக்கான 10 சுற்றுகளின் முடிவில் ஜோசப் மேத்யூ முதலிடத்தையும்,மால்சவ் டான்கிலியானா 2வது இடத்தையும், லால் மவிபுவா 3வது இடத்தையும் பிடித்து அசத்தினர்.

இறுதியாக நடைபெற்ற யூரோ ஜே.கே 17ன் 11 வது போட்டியில் தமிழக வீரர் விஷ்ணு
பிரசாத் முதலிடத்தையும், ஐதராபாத் வீரர் ஆனிந்தித் ரெட்டி 2வதுஇடத்தையும், மகாராஷ்டிர வீரர் நயன் சாட்டர்ஜி 3வது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியின் தனிச்சிறப்பாக முதல் முறையாக மீரா எர்டா என்ற பெண் வீராங்கனையும் சக வீரர்களுடன் கலந்து கொண்டார்.