சர்க்கரை நோய்க்கு அமெரிக்காவிலிருந்து செயற்கை கணையம்

கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அறிமுகம்

கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ நகரில் நடைபெற்ற 77 வது அமெரிக்க சர்க்கரை நோய் கழக விஞ்ஞான மாநாட்டில், செயற்கை கணையம் அறிமுகம் செய்யப்பட்டு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் உபயோகப்படுத்த CDF நிறுவனத்தினர் அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை கணையம் என்றால் என்ன?

இயற்கையான முறையில், இயற்கையான கணையம் நிமிடத்திற்க்கு நிமிடம் சர்க்கரையின் அளவை அளந்து தேவையான இன்சுலின் சுரப்பு சுரக்கின்றது. இதனால் சர்க்கரை அளவு 70 – 140 IAக்குள் எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இது தொடர்ந்து வாழ்நாள் முழுக்க நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இயற்கையான கணையம் 5 – 10 IA சர்க்கரை கூடி குறைந்தாலும் அறிய வல்லது. சர்க்கரை குறைந்தாலும் அறிய வல்லது. சர்க்கரை குறைந்தால் இன்சுலின் சுரப்பு குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும். சர்க்கரை அதிகமானால் அதற்கு தகுந்தாற்போல் இன்சுலின் சுரக்கும்.

இயற்கை கணையம் செய்யும் இந்த வேலையை தற்போது செயற்கையான கருவி செய்கின்றது.

செல்போன்  அளவில் கை அடக்கமான கருவி இது. இக்கருவியில் 2டியூப்கள் உள்ளன. 1டியூப் வழியாக இன்சுலின் செலுத்தப்படும். இன்னொரு ஊசி போன்ற கருவி தொடர்ந்து சர்க்கரையை கண்காணித்து கொண்டே இருக்கும். சர்க்கரையின் அளவில் உண்டாகும் ஏற்றத் தாழ்வுகளையும் கண்காணித்துக் கொண்டே இருக்கும். இக்கருவி முழுமையாக கம்ப்யூட்டர் கன்ட்ரோலில் இயங்குகிறது. ஏறி இறங்கும் சர்க்கரைக்கு தகுந்தாற்போல் இன்சுலின் தானாக உடலில் செலுத்தப்படும். இயற்கையான கணையம் செய்யும் வேலையை செயற்கையான கருவி செய்கிள்றது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை எப்பொழுதும் சீராக வைக்கப்படும்.

இன்சுலின் பம்ப் – செயற்கை கணையம் வேலை செய்யும் முறை

பேசல், போலஸ், கரெக்ஷன் (Basal, Bolus, Correction) என்ற கொள்கையில், செயற்கை கணையம் செயல்படுகிறது. பேசல் இன்சுலின் (Basal insulin) என்பது 1 மணி நேரத்தில் 0.5 முதல் 1 யூனிட் வரை செலுத்தப்படும். சாப்பிடுவதற்க்கு முன் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த வல்லது. போலஸ் இன்சுலின் (Bolus insulin) என்பது உண்ணும் உணவிற்க்கு ஏற்ப உடலில் செலுத்தப்படும் இன்சுலின். இது உண்ணும் உணவில் உள்ள மாவு சத்தை பொருத்து மாறுபடும். கரெக்ஷன்  (Correction) என்பது ஏதேனும் காரணத்தால் சர்க்கரை அதிகமானால் அதை உடனடியாக குறைக்க செலுத்தப்படும் இன்சுலின். யாருக்கு எவ்வளவு இன்சுலின் தேவைப்படும் என்பதை 3-5 நாட்கள் மருத்துவமனையில் அனுமதித்து கணக்கீடு செய்தபின் தான் கொடுக்க முடியும்.

செயற்கை கணையம் பொருத்திவிட்டால், நான் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாமா? சர்க்கரை நோய் இல்லாதவர்கள் போல இனிப்பும் சாப்பிடலாமா? பலர் செயற்கை கணையத்தை பொருத்திய பின் சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து. இனிப்பு, அதிக உணவு தவிர்க்கப்பட வேண்டும். ஸ் வாழ்கைத்தரம் உயரும் ஸ் சாப்பிடும் நேரத்தை சற்று முன் பின் மாற்றிக் கொள்ளலாம் ஸ் உணவின் அளவை சற்று கூட்டி குறைத்து சாப்பிடலாம் ஸ் சாதாரண உணவை சாப்பிடலாம் ஸ் தாழ்நிலை சர்க்கரை உண்டாகும் வாய்ப்பு மிகமிக குறைவு. முக்கியமாக இரவில் தாழ்நிலை சர்க்கரை பற்றிய பயம் வேண்டாம்.

இந்த செயற்கை கணையம் தாழ்நிலை சர்க்கரை உண்டானால் இன்சுலினை நிறுத்திவிடும்.

சர்க்கரை மிக அதிகமானால்  (உத.300 மிகிக்கு மேல்) அலாரம் அடிக்கும். மருத்துவ குழுவினருக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும். சில குறிப்பிட்ட மாடல்களில் நோயாளி எங்கிருக்கிறார் என்பதையும் GPRS மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆம்புலன்ஸ் அனுப்ப உதவியாகஇருக்கும்!!

செயற்கை கணையம் (பம்ப்) யாருக்கு ஏற்றது ?

  • முதல் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு முற்றிலும் பொருத்தமானது.
  • கர்பிணி பெண்கள் (கர்ப கால சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது)
  • Brittle டயபடிஸ் உள்ளவர்களுக்கு ஏற்றது.
  • Busy யான Irregular Life Style உள்ளவர்களுக்கு ஏற்றது.
  • நேரத்திற்க்கு சாப்பிட முடியாதவர்கள் எப்பொழுதும் பரபரப்பான வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்றது.
  • பின்விளைவுகள் உள்ள 2 ஆம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது – சிறுநீரக பாதிப்பு இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றது.
  • அதிக அளவு இன்சுலின் தேவைபடுபவர்களுக்கு ஏற்றது இன்சுலின் தேவையில் 3ல் 1 பங்கு குறையும்.

இதில் பயன்படுத்தப்படும் இன்சுலின் உடனடியாகவும், வேகமாகவும் வேலை செய்யக்கூடிய Short acting insulin Analog ஆகும். முன்பதிவு கண்டிப்பாக அவசியம்: 0422 – 3233333,  90259 66888.