சமுதாயத்தை மாற்ற முடியுமா?

‘சமுதாயம்’ என்பது ஒருவார்த்தை மட்டும் தான். நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை. நிஜத்தில் நீங்கள் இருக்கிறீர்கள், நான் இருக்கிறேன், இன்னொருவர் இருக்கிறார், மற்றுமொருவர் இருக்கிறார். இங்கு தனித்தனி மனிதர்கள் தான் இருக்கிறார்கள். மனிதர்கள் தான் நிஜம். மனித இனம் என்பதுவெறும் வார்த்தை தான்.

சமுதாயம் மாற வேண்டுமெனில், சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும்மாற வேண்டும். தனிமனித மாற்றம் இல்லாமல், இவ்வுலகில் மாபெரும் மாற்றங்கள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வுலகம் மாறவேண்டும் என்றால், அதன் முதல்படியாக, நீங்கள் மாறவேண்டும். எந்த மாற்றத்தை இந்த உலகில் விரும்புகிறீர்களோ அந்த மாற்றத்தை முதலில் உங்களிடம் கொண்டுவரவேண்டும். அந்த மாற்றம் உங்களுக்குள்ளேயே நிகழவில்லை என்றால் இவ்வுலகில் அந்த மாற்றம் எப்படி நிகழும்? நான் செல்லும் இடத்தில் எல்லாம்மக்கள் ‘உலக அமைதி’ பற்றிப் பேசுவார்கள்.

அப்போது அவர்களிடம் ‘உங்கள் வாழ்வில் நீங்கள் அமைதியாக, நிம்மதியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்பேன். இதற்கு அவர்களால் ‘ஆம்’ என்று சொல்ல முடியாது. நீங்கள் நிம்மதியாக இல்லையெனில், உலகில் நிம்மதியும், அமைதியும் எப்படி சாத்தியப்படும்? இவ்வுலகில் வன்முறையை நீங்கள் அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதற்காக நீங்களும், இந்த உலகும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது. போர் ஏதும் நடக்கவில்லை என்பதாலேயே, உலகம் அமைதியாக, நிம்மதியாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. வேறு பலவிதமான சண்டைகளும், சர்ச்சைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

உண்மையிலேயே இவ்வுலகில் மாற்றம் நிகழ வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு ஒரேவழி, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தன்னளவிலே மாறுவது தான். இந்த வேலையைத் தான்தற்போது ஈஷா செய்துவருகிறது. தேவையான அளவிற்கு விழிப்புணர்வுடன் செயல்படக் கூடிய நபர்களை ஓரளவிற்கேனும் நாம் உருவாக்கினால், நிச்சயம் இவ்வுலகில் மாற்றம் கொண்டு வரலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் இதுபோன்ற ஒருமாற்றத்தை நாம் உருவாக்க முடிந்தால், அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

அதனால் தான் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நாம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோடு செயல்பட்டு வருகிறோம். தொழில் நிறுவனங்கள், அரசாங்கம், அதிகாரவட்டம் என எதுவாக இருந்தாலும் சரி, ஆயிரம் மனிதர்களின் வாழ்வில் மாற்றமோ, தாக்கமோ உண்டு செய்யக் கூடியவர்களெல்லாம் தலைவர்கள் தான். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் ஒரு மாற்றம் உண்டானால், இவ்வுலகை அவர்கள் காண்பதிலும், உணர்வதிலும் மாற்றம் ஏற்பட்டால், இந்த உலகும் மாறும்.

மேல்மட்ட தலைமையோடு ஒருவகையிலும், கிராமத்தில் இருக்கும் சாதாரண மக்களோடு வேறுவகையிலும் நாம் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருகிறோம். ஏனெனில், இவ்விரண்டிலுமே அடிப்படை மாற்றங்கள் நிச்சயம் வரவேண்டும்.

கோவை வெள்ளியங்கிரிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள எழிலும் அமைதியும் தவழும் ஈஷா யோகா மையத்தின், நிறுவனரும் ஞானியுமான சத்குரு அவர்கள் உலக மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு செயல் திட்டங்களில் தம்மை அர்பப்ணித்துள்ளார். உலகம் முழுவதும் சாமானியர்கள், மாணவர்கள், தலைவர்கள், ராணுவவீரர்கள், சிறைக்கைதிகள் போன்ற  பல்வேறு தரப்பினருக்கும் யோகா வழங்கிக¢ கொண்டிருக்கிறார். மேலும் கிராமபுத்துணர்வு திட்டங்கள், பசுமைக¢கரங்கள் இயக்கம் போன்ற சமூகநல செயல்களிலும் தம்மை ஈடுபடுத்தியுள்ளார்.