இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது ஸ்கோடா ஆட்டோ

கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய பணிமனையை திறந்துள்ளது.

ஸ்கோடா ஆட்டோ தனது புதிய பிரமாண்ட பணிமனையை தமிழ்நாட்டில் உள்ள கோவையில் எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து துவக்கி உள்ளது. இந்த புதிய பணிமனையை ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் விற்பனை, சேவை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் ஜாக் ஹோலிஸ், எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி எஸ். அற்புதராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். ஹஇந்தியா 2.0′ திட்டத்தில், அடுத்த 3 ஆண்டுகளில் 50 புதிய நகரங்களில் டீலர்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் தென் பகுதியில் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கிலும் வலுவாக கால் பதிக்கும் நோக்கத்துடனும் ஸ்கோடா ஆட்டோ தனது புதிய பணிமனையை கோவையில் திறந்துள்ளது.
இந்த புதிய பணிமனை உப்பிலிபாளையம் பிரதான சாலை, சௌரிபாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது 49,585 சதுர அடியில், அதாவது 4,607 சதுர மீட்டரில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனை ஒரே சமயத்தில் 50 கார்களை நிறுத்தும் வசதியை கொண்டுள்ளது. இந்த பணிமனை ஆண்டுக்கு 20 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்யும் திறன் கொண்டுள்ளது. விற்பனைக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள இதில் 40 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பணிமனையில் ஸ்கோடா ஆட்டோவின் தொலைநோக்கு பார்வையான ஹபசுமை எதிர்காலம்’ திட்டத்திற்கான மழை நீர் சேகரிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பணிமனையை திறந்து வைத்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் விற்பனை, சேவை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் பேசுகையில், இந்தியாவின் தென் பகுதியில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, சந்தையை வலுப்படுத்தி உள்ளது. இந்த புதிய பணிமனையை திறந்திருப்பதன் மூலம் எங்களது பிராண்ட் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும். எங்கள் பிராண்ட் விற்பனையில் எங்களது பங்குதாரரான எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் உறுதிபட நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொந்திரவில்லாத அனுபவத்தையும் மன அமைதியையும் தருவதே எங்களின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி எஸ். அற்புதராஜ் பேசுகையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியாவுடன் இணைந்து புதிய மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பணிமனையை திறப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். சிறந்த சேவை கட்டமைப்பு மற்றும் உகந்த வணிக செயல்முறைகள் ஆகியவை ஈடில்லா சேவை அனுபவத்தை அளிக்கும். மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா கார்கள் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கும் உறுதி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவையின் முயற்சிகள்,
ஸ்கோடா ஆட்டோ இந்தியா முன்பு ஹஈசிபை’ என்னும் சூப்பர்ப் மாடல் கார்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் மூன்று ஆண்டு இறுதியில் 57 மதிப்பில் திரும்ப பெறும் திட்டத்தை அறிமுகம் செய்தது. மேலும் இந்தியாவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் அனைவரும் அணுகக் கூடிய வகையிலான திட்டங்களை ஸ்கோடா வழங்கி வருகிறது.
மேலும் இந்நிறுவனம் ஸ்கோடா ஷீல்டு பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த பிரிவின் முதல் முயற்சியாக, வாடிக்கையாளர்களுக்கு 6 ஆண்டுகள் தொந்தரவு இல்லாத அனுபவத்திற்கு உறுதி அளித்தது. மேலும் இது வாகன காப்பீடு, 24 ஒ 7 சாலை உதவி திட்டம் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவற்றை வழங்குகிறது. இவை, ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா ஆக்டோவியா, ஸ்கோடா ராபிட் மற்றும் ஸ்கோடா கோடியக் ஆகிய கார்களுக்கும் பொருந்தும்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா பற்றி,
ஸ்கோடா ஆட்டோவின் துணை நிறுவனமாக இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஸ்கோடா ஆட்டோ இந்தியா செயல்படுகிறது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் ஆட்டோ மொபைல் துறையில் மிகவும் பழமையான நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் மிலாடா போல்ஸ்லேவ்வில் உள்ளது.
ஸ்கோடாவின் 4 மாடல் கார்களான ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா ஆக்டோவியா, ஸ்கோடா ராபிட் மற்றும் ஸ்கோடா கோடியக் ஆகிய கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் 64 விற்பனை மையங்கள் மற்றும் 62 சேவை மையங்களை கொண்டுள்ளது.