ஜூலை 6ம் தேதி கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு மணல் விநியோகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்னும் 15 நாட்களுக்குள் முக்கிய கோரிக்கையான மணல் தட்டுப்பாட்டை நீக அதிக அளவு அளவில் குவாரிகள் திறக்கப்பட்டு தமிழகத்திற்கு தேவையான முழு அளவு மணல் விற்பனை பொதுப்பணித்துறை மூலமாக செயல்படுத்தப்படும்  என்று முதல்வர் அறிவித்திருந்தார். தனியார் மூலம் மணல் குவாரிகள் நடத்தப்பட்டபோது ஒரு நாளைக்கு 40,000 லோடு மணல் விற்பனையானது. ஆனால் அரசு குவாரிகளை நடத்தும்போது 4000லோடு மணல் விநியோகிக்கப்படுகிறது. இதனால் மணல் இல்லாமல் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது, மணலுக்கு மாற்றாக M-sand பயன்படுத்த அரசு அறிவித்தும் அரசு துறைகளில் M-sand பயன்படுத்த சுற்றறிக்கைகளோ, அதை Schedule of rates-ல் சேர்க்கவோ இல்லை.

இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதனை கண்டித்து வருகிற ஜூலை 6 ஆம் தேதி கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது என்று K.ராஜவேல், இந்தியாவின் அடுக்கு மாடி குடியிருப்புகள் சங்கம், கோவை, கார்த்திக், கோவை,சிவில் பொறியாளர்கள் சங்கம், V.கோபால கிருஷ்ணன், சிவில் பொறியாளர்கள் ஆலோசனை சங்கம், சப்தரிஷி, அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் சங்கம்(CEBACA), ராஜேஷ் B லுண்டு, CREDAI மற்றும் உதயகுமார், நிறுவன ஒப்பந்தக்காரர் சங்கம் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.