நேரு கல்லூரியில் ‘கேரியர் கைடு’

கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு ஏரோநாட்டிக்ஸ் மற்றும் அப்லைடு சயின்ஸ் கல்லூரியில் ‘கேரியர் கைடு’ என்ற நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நேரு கட்டடக் கலை பள்ளியின் இயக்குனர் அம்ருத, சிறப்பு விருந்தினர் கேரியர் கன்சல்டன்ட் ஜெயபிரகாஷ் காந்தி, நேரு காலேஜ் அப் இன்ஸ்டிடியூடின் தலைமை நிருவாக அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நேரு இன்ஸ்டிடியூட் அப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி முதல்வர் மணியரசன் ஆகியோர் பங்கேற்றனர். பிளஸ்2 பள்ளி மாணவர்களுக்கான மேற்கல்வி ஆலோசனையை சிறப்பு விருந்தினர் வழங்கினார். ஏராளமான மாணவ, மாணவியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.