ஈஷா விவசாய இயக்கம் சார்பாக இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக மேற்கு மண்டல இயற்கை விவசாய தன்னார்வத் தொண்டர்களுக்கான இயற்கைவிவசாயத்தின்நுழைவாயில் என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி, கோவை மாவட்டம் சூலூர் வட்டம் செங்கத்துறையில் உள்ள  GJ அங்கக வேளாண் பண்ணையில் அண்மையில் நடைபெற்றது.

 

இப்பயிற்சி ஈஷா பசுமை கரங்கள் திட்டதின்  இயற்கை விவசாய நிபுணர்களால் பயிற்று விக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் தூரன்நம்பி மற்றும்  மண்ணியல் நிபுணர் சரவணன் பங்கேற்றனர்.   இயற்கை  விவசாயத்தை தமிழகம்  முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை இடு பொருட்கள் செய்யும் வழி முறைகள், பயன்படுத்தும்வழிகள், சேமிக்கும்முறைகள், அவற்றின் பலன்கள் போன்றவை  பயிற்றுவிக்கப்பட்டது.  இரசாயன விவசாயத்திற்கு மாற்றுதேடும் முயற்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு இப்பயிற்சி மிகவும் உகந்ததாக இருந்தது. இதில் 40       க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.