பேக்கரி தொழில் நுட்ப கண்காட்சி 2017

சினர்ஜி எக்ஸ்போஷர், இவெண்ட் நிறுவனத்தினர் இணைந்து, பேக்கரி தொழில் நுட்ப கண்காட்சி 2017, கோவை, கொடிசியா தொழில்கண்காட்சி வளாகத்தில் வரும் ஜூலை 7,8,9 ஆகிய தேதிகளில் நடத்துகின்றனர். இக்கண்காட்சியில் உயர் தரமான பேக்கரி பொருட்கள், பேக்கரி மற்றும் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அரங்குகள், சுவையூட்டும் பொருட்கள், சாக்லேட் தயாரிக்கும் நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. கண்காட்சியின் 2ம் நாள் BAKERS APP தொடங்கப்படவுள்ளது. தொழில் சார்ந்த பார்வையாளர்களுக்கு இலவச நுழைவு அனுமதி கூப்பனை பெற www.bakerstechnologyfair.com-ல் பதிவு செய்து கொள்ளலாம்.