100 ஆண்டுகள் ரத்த கரை மறையாத செங்கல் சுவர்

1919 ஏப்ரல் 13 பஞ்சாப் ,அமிர்தசரஸ் நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது,அன்று சீக்கியர்களின் வைசாகி திருநாள் ,அன்று பிரிட்டிஷ் அரசின் ஜெனரல் டயர் ஊரடங்கு உத்திரவிட்டார்,இந்த தகவல் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை.

இது அறியாமல் இந்திய தலைவர்கள் இருவர்களை கைது செய்ததை எதித்து ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது.

இதனை அறிந்த ஜெனரல் டயர் துப்பாக்கிப்படை வீரர்கள் 50 பேரை அனுப்பினார்.

சற்று நேரத்தில் மக்களை நோக்கி பாயும் தோட்டாகள் ரத்த கரையுடன்  விழுந்தது,1650 முறை சுற்றுகள் தோட்டா தீரும் வரை 10 நிமிடம் மழை போல் பொழிந்தது,379 பேர் இறந்தனர் 1100 பேர் காயம்பட்டனர்,இந்திய காங்கிரஸ் 1000 பேர் பலியாகி 1500 பேர் காயம்பட்டதாக பின்னர் அறிவித்தது.

இப்படி ஒரு வீரதீர செயலை செய்ததுக்காக பிரிட்டன் அரசாங்கம் ஜெனரல் டயரை பாராட்டியது,

பிரிட்டன் நாட்டின் அடிமை ஆட்சியை ஒழிக்க பல இயக்கங்கள் உருவாவதற்கு இந்நிகழ்வு முதல் அடியாக இருத்தது.

100 ஆண்டுகள் ரத்த கரை மறையாத செங்கல் சுவர்கள், நினைவுகள் அல்ல,சிவப்பு சரித்திரம்.