பிஷப் கல்லூரியில் பி.பி.ஏ துறை விழா

சி.எஸ்.ஐ.பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரின் பி.பி.எ. துறையில் வேல்டிக்டரி விழா சிறப்பாக  நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேவ்’ஸ் I.A.S அகாடமி நிறுவர் தேவராஜன், கௌரவ விருந்தினராக கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜெமிமா வின்ஸ்டன் மற்றும் துறைத்தலைவர் டாக்டர்.V.சவிதா,துணை பேராசிரியர் மங்கையர்க்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தொடக்கமாக மாணவன்.லட்சுமிபதி வெங்கட் வரவேற்புரை வழங்கினார். பின் சஹ்ரன் ஆன ஜோகி துறையின் ஆண்டு அறிக்கையை அறிவித்தார். கல்லூரின் முதல்வர், பேசுகையில் “எதை செய்ய வேண்டுமோ அதை செய், எதை செய்யக்கூடாதோ அதை செய்யாதே, எந்த தவறான பழக்கவழங்கமும் வேண்டாம் என்று வாழ்க்கையின் முன்னேற 3H வேண்டும்,அதாவது humanity, humour, holiness  இவைகள் இருக்க வேண்டும்” என்று  குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர் அரசு தேர்வுகளை பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் மாணவர்களுக்கு கூறினார். அதன் பிறகு, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாணவராக தர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கோப்பையும் சான்றிதலும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். இறுதியில் துறைத்தலைவர் டாக்டர்.V.சவிதா நன்றியுரை வழங்கினார். இதில் இத்துறையின் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.