‘டாடா க்விஸ் போட்டியில் பிஎஸ்ஜி டெக் அணி வெற்றி!

கோயம்புத்தூர், டாடா க்ரூசிபிள் கேம்பஸ் வினாடி -2019  போட்டியின் கோயம்புத்தூர்  வட்டார பகுதிகளுக்கான  போட்டியில் பிஎஸ்ஜி டெக் அணியைச் சேர்ந்த பிரகதீஷ்வரன் மற்றும் சஞ்சய் சீதாராமன் வெற்றிப்பெற்றனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற டாடா க்ரூசிபிள் கேம்பஸ் வினாடி-2019 போட்டியில் 5-வது மண்டல பிரிவில் சென்னை ஐ.ஐ.டி.யின் பிரணவ் ஹரி.ஜி மற்றும் ராகுல் ஹமாயூன் மற்றும் கொச்சியின் சியூஎஸ்ஏடி-ன் ரித்விக் மற்றும் ஜிஸ் செபாஸ்டின் ஆகியோர் அடங்கிய இரு அணிகள் முன்னணி இடங்களை பிடித்திருக்கின்றன. அடுத்து இந்த அணிகள் இதர 4 மண்டலங்களைச் சேர்ந்த அணிகளுடன், மும்பையில் நடைபெறவிருக்கும் தேசிய இறுதிப் போட்டியில் கலந்து கொள்கின்றன.

கோயம்புத்தூரின் விவாந்தா சூர்யாவில் நடைபெற்ற நகர அளவிலான இறுதிப்போட்டியில் மொத்தம் 269 அணிகள் போட்டியிட்டன. இப்போட்டியில் பிரகதீஷ்வரன் மற்றும் சஞ்சய் சீதாராமன்,  75,000 ரூபாய் ரொக்க பரிசைத் தட்டிச்சென்றனர். இவர்கள் தேசிய இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற மண்டல சுற்றில் கலந்து கொள்வார்கள். ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அணியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் ரோஷன் கிருஷ்ணா இரண்டாமிடத்தைப் பிடித்தனர். இவர்கள் ரொக்கப்பரிசாக ரூ.35,000-ஐ வென்றனர். இப்போட்டிகளின் தலைமை விருந்தினராக நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த வருட விநாடி-வினா போட்டிக்கான கருத்தாக்கமானது, டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை பாணியில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிரபல விநாடி-வினா நிபுணரான க்விஸ் மாஸ்டர் பிக் ப்ரெய்ன் கிரி பாலசுப்ரமணியம், தனக்கே உரிய தனித்துவமான, விறுவிறுப்பான பாணியில் இந்த போட்டியை நடத்தினார். இந்தியாவின் மிகப்பெரும் கேம்பஸ் விநாடி-வினா போட்டியின் 15-வது பதிப்பு, 40 நகரங்களில் இரண்டு மாதம் வரை நடைபெறுகிறது. இதில் 5 மண்டலச் சுற்றுகள் அடங்கும். இவை மும்பையில் நடக்கும் தேசிய இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற உதவும் தகுதிச்சுற்று போட்டிகளாகும். தேசிய அளவிலான இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு டாடா க்ருசிபிள் கோப்பையுடன் 5,00,000/- ரூபாய் பரிசாக வழங்கப்படும். இந்த விநாடி-வினா போட்டியின் பரிசுகளை ‘ஃபாஸ்ட்ராக்’ வழங்குகிறது.