ஈசா கல்லூரியில் 11வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

கோவை, பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரி  11வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி, தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்,  2008ம் ஆண்டு துவங்கிய இக்கல்லூரி பல சாதனைகள் படைத்து வருகிறது. பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் தனிநபர் மற்றும் சமூக வளர்ச்சி அடைய பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். தற்போது 1200 மாணவ, மாணவிகள் பொறியியல் பயின்று வருவது பெருமையாக உள்ளது என்று கூறினார். கல்லூரி செயலாளர் டி.இ.சுஜாதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முதன்மை செயல் அதிகாரி டி.இ.அஜித் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ராபர்ட் கென்னடி கல்லூரி ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பார்க் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் பி.வி.ரவி மற்றும் சிறப்பு அழைப்பாளராக பாலக்காடு பாஸ்ட்பின் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் குருவாயூரப்பன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

தொடர்ந்து கல்லூரியில் 100% வருகைபதிவு அளித்த மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், சிறந்த மாணவர், அனைத்து பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். முன்னதாக கல்லூரி சாதனைகள் அடங்கிய புத்தகத்தை தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பி.வி.ரவி,  குருவாயூரப்பன் பெற்று கொண்டனர்.  பின்னர் நடைபெற்ற விளையாட்டு விழா பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு, தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, பதக்கங்கள், பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர்.  தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பலர் தங்களது இசை, நாடகம் மற்றும் நடனம் திறமைகளை வெளிப்படுத்தினர். முடிவில் தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ் நன்றி கூறினார்.

விழாக்களில் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.