வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்திட்டப் பணிமனை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கான செயல்திட்டப் பணிமனை.

தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் உள்ள 31 வேளாண் அறிவியல் நிலையங்களின் 2019–20 க்கான செயல்திட்ட வரைவு பணிமனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று (22.03.2019) துவக்கபெற்று நாளை வரை (23.03.2019) நடைபெறவுள்ளது.
இதில் 31 வேளாண் அறிவியல் நிலையங்களில் உள்ள விஞ்ஞானிகள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் பங்குபெற்று தொழில்நுட்ப செயல்திட்டத்தை இறுதி செய்ய உள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார் அவர்கள் தனது விழா சிறப்புரையில் முதல்நிலை விரிவாக்கப் பணிகளை வேளாண் அறிவியல் நிலையங்கள் சிறப்பாக மேற்கொள்வதை பாராட்டினார் மேலும், வேளாண் அறிவியல் நிலையங்களில் தீவனப்பயிர் மற்றும் வேளாண் காடுகள் சார்ந்த பயிர் செயல் விளக்கங்களை (விவசாயிகள் பயன்பெறும் வகையில்) அமைக்க வேண்டும் என்று அறிவுருத்தினார் சிறுதானியங்கள், நீர் மேலாண்மை தொழில்நுட்பங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து இவ்வாண்டிற்கான செயல் திட்டங்களை வடிவமைக்குமாறு அறிவுறுத்தினார்.

முனைவார் பிரசாத், இயக்குநர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், ஹைதராபாத் தனது சிறப்பு உரையில் இந்த ஆண்டிற்கான செயல் திட்டம் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னிலைப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு வேளாண் அறிவியல் நிலையங்கள், மூலம் 185 தொழில்நுட்பங்கள், 4,000 செயல்விளக்கங்கள் மூலம் 50,000 விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப் பட்டது என்றார்.
முனைவர் இராமசாமி இயக்குநர் விரிவாக்கம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை, முனைவர் சு.ஜெயராமன், விரிவாக்கக் கல்வி இயக்குநர் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன் வள பல்கலைக்கழகம், முனைவர் சுப்பிரமணியன், ஆராய்ச்சி இயக்குநர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் முனைவர் ஜெ.வெங்கட பிரபு, இயக்குநர் திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியேர் பாராட்டுரை ஆற்றினர்.

விரிவாக்கக் கல்வி இயக்குநர் முனைவர் மு.ஜவஹர்லால், அவர்கள் இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று, பணிமனையின் நோக்கம் குறித்து விளக்கினார் இறுதியாக முனைவர் அ.கிறிஸ்தோபர் லூர்துராஜ், பேராசிரியர் மற்றும் தலைவர் (பயிற்சிப்பிரிவு) நன்றியுரை ஆற்றினார்.