100 சதவீத வாக்குப் பதிவினை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகள்

கோவை பூருக் பீல்ஸ் வணிக வளாகத்தில், 20 கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 120 – கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவினை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் இயந்திரத்தின் மாதிரி செயல்முறை விளக்கத்தினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் அவர்கள் துவக்கிவைத்து பார்வையிட்டார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல உதவி ஆணையர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.ஜே.செந்தில்அரசன், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், நிர்வாக அலுவலர் மத்திய மண்டலம் எம்.எம்.கனகராஜ் மற்றும் அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.