இந்துஸ்தான் கல்லூரியில் “காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்”

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், உயிரி தொழிற்நுட்பவியல் துறை  சார்பில் “காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்”  இன்று(29.6.17) கல்லூரி அரங்கில் நடைப்பெற்றது. கோ.ராஜலட்சுமி, துறைத்தலைவி, உயிரி தொழிற்நுட்பவியல் துறை வரவேற்புரை ஆற்றினார். சரசுவதி கண்ணையன், நிர்வாக அறங்காவலர், இந்துஸ்தான் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பிரியா சதீஷ்பிரபு, செயல் அறங்காவலர் மற்றும் செயலாளர், இந்துஸ்தான் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை வாழ்த்துரை வழங்கினார். கு.மா.சின்னதுரை, முதல்வர், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைமை வகித்தார். காளான் வளர்ப்பு பயிற்சி முறையை A.மாணிக்கம் பயிற்றுவித்தார்.  இந்த முகாமில் இந்துஸ்தான் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.