அபிராமி செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

அபிராமி செவிலியர் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு மாணவர்கள் விளக்கேற்றும் விழா கல்லூரி அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. இயக்குநர் டாக்டர் குந்தவிதேவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இயக்குநர் டாக்டர் உமாதேவி வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் ஜெம் காலேஜ் ஆஃப் நர்சிங் முதல்வர் டாக்டர் லிஸி ரவிந்திரன், முதல்வர் டாக்டர் ஷைலா ஐஸக், பூரொபசர் ஐரின் மெர்சி துணை முதல்வர் மற்றும் பேராசிரியர் மகாராணி ஆகியோர் மாணவர்களின் விளக்கினை ஏற்றினார். மாணவர்கள் செவிலியர்களுக்கான உறுதிமொழி பிரமாணம் எடுத்துகொண்டனர்.

இவ்விழாவில் கல்லூரியின் தலைவரர் டாக்டர் பெரியசாமி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் டாக்டர் லிஸி ரவிந்திரன் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அவதியுறும்போது அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி நம்பிக்கை கொடுக்க வேண்டியது செவிலியர்களின் கடமை என்றும் செவிலியர்களின் சேவை, மகத்துவம் மற்றும் பண்புகள் குறித்து அறிவுரை கூறினார். கல்லூரி நிர்வாகிகள் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் பாலமுருகன், டாக்டர் சுச்சரிதா ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரியின் நிர்வாக அதிகாரி குருமூர்த்தி நன்றி கூறினார்.