உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் மன்ற இலட்சினை வெளியீடு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தாய் மொழிதின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் கு.கருணாகரன் தலைமையேற்ற இவ்விழாவில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சி.சித்ரா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இத்தினத்தை முன்னிட்டு பேச்சு, கவிதை, பாடல், கிராமிய நடனம், நடிப்பு, ஓவியம் உள்ளிட்ட கல்லூரிகளுக்கிடையேயான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியோடு  தொடங்கிய பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் தமிழ்மன்றத்தின் இலட்சினையை வெளியிட்டார். அதேசமயம் கிராமியக் கலைக்கோட்டம் என்ற கிராமிய கலைப் பயிற்சி வகுப்புகளும், பண்பாட்டு அருங்காட்சியக அமைப்பு பணியும் தொடங்கி வைக்கப்பட்டன. மாநில அளவில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இவ்விழாவில் துணை முதல்வர் எஸ். தீனா, மொழிப்புல முதன்மையர் ஹெனா ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  மொழித்துறைத் தலைவர் த.விஸ்வநாதன், தனசேகரபிரபு உள்ளிட்ட பேராசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.