இந்துஸ்தான்  கல்லூரியில்  தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் “ஹிலாரிக்காஸ் –2019″ என்ற தலைப்பில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தென்மாநில அளவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தென்னிந்திய அளவில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர். இக்கலை நிகழ்ச்சியில் குழு நடனம், தனிநபர் நடனம், பாட்டுக்கு பாட்டு, வினாடிவினா, முக அலங்காரம், காய்கறிகள் அலங்காரம், பூ அலங்காரம், கோலப்போட்டி, புகைப்பட போட்டி இப்படி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் மூலம் மாணவ மாணவியர்களின் தனி திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த மேடையாக இந்த கலை நிகழ்ச்சி அமைந்தது.

தென்னிந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 120 லிருந்து 150 கல்லூரிகள் வரை பங்கேற்று வருகின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசும், பரிசுப்பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக “ஹிலாரிக்காஸ்” என்ற கலை நிகழ்ச்சியுடன், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏதாவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் கலை நிகழ்ச்சிக்கு மாணவர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்ச்சியினை, கோவை முதன்மை வருமானத் துறை ஆணையர் ஜி ஆர் ரெட்டி அவர்கள் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்துஸ்தான் குழுமத்தின் தலைவர்  கண்ணையன் அவர்கள் தலைமை ஏற்றார். இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியாசதீஷ்பிரபு, டிரஸ்ட்.சக்திவேல் மற்றும் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி பேராசிரியர்கள், பேராசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.