சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ‘உலக யோகா தினம்’

மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், நிறுவிய சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப்பள்ளியில் இன்று (21-06-2017), ‘உலக யோகா தினம்’கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளிச்செயலர் ‘தமிழ்ச்செம்மல்’ சிந்தனைக்  கவிஞர் கவிதாசன் தனது உலக யோகா தின வாழ்த்துரையில்,‘சச்சிதானந்த சுவாமிகளின் யோக நெறிகளை இளம் வயதில் மாணவ மாணவியர் கற்றுக்கொள்வதன் மூலம், நல்லஉடல் நலம், வலிமையானமனம், நீண்ட ஆயுள் ஆகியனவற்றைப்பெறலாம்’ என்றுகூறினார்.

இந்நிகழ்ச்சியில், மு.ஞானபண்டிதன், பள்ளித்துணைச்செயலர், உமாமகேஸ்வரி, பள்ளி முதல்வர், சு. சக்திவேல், பள்ளித்துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு யோகா சனங்களைச் செய்தனர். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகிலாபிரதீப், ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கண்ணன் பராமரிப்புத்துறை, ஆகியோர் செய்திருந்தனர்.