இந்துஸ்தான் கல்லூரியில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையுடன் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்  கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாட்டினை கணினி துறை தலைவர் ரங்கராஜ் மற்றும் செல்வபிரியா  ஆகியோர் செய்திருந்தனர்.