நண்பர்கள் இல்லாமல் யாரும் இல்லை எல்லோருக்கும்

ஒவ்வொரு ஆசை இருக்கும். அதுல நம்ம ஜெய்ப்போமா தோற்று போவோமானு தெரியாது. ஆனால் எப்படியும ஜெய்போம்னு மனதில் நினைத்து கொண்டு பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். என் வாழ்நாளில் எப்போதும் தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருக்கும் ஃபாரிண்ண வை அழகான மாலை வேளையில் நம் ‘தி கோவை மெயில்’ க்கு அளித்த சிறப்பு பேட்டி காண்போம்

பிடிவாதம்  பெண்களுக்கு  இருக்கணுமா?

மனிதனா பிறந்த அனைவருக்கும் பிடிவாதம் இருக்கும்.  அது எந்த இடத்தில் காட்ட வேண்டுமோ அந்த இடத்தில் காட்டுவார்கள்.

நீங்கள் அதிகமாக விரும்ப கூடிய விஷயம்?

என் திறமையதான் நான் அதிகமாக நேசிக்குறேன். என் வாழ்நாளில் தொகுப்பாளராக சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

நட்பு?

நம்ம அதிகமாக சந்தோசமா இருக்குற இடம் நல்ல நண்பர்கள் தோழிகள் இருக்கும் இடத்தில்தான். பிரேண்ட்ஸ்ப் இல்லாமல் யாரும் இருக்க முடியாது என்பது என் கருத்து

சினிமாவில்  நடிக்க  ஆர்வம்  உண்டா?

நான் தொகுப்பாளராக இருக்கும் போதே எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் இன்னும் நிறைய விஷயங்கள் கத்து கொண்டு சினிமாவில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். இப்போதைக்கு அதை பத்தி நான் யோசிக்க போவதும் இல்லை. நேரமும் காலமும் சேர்ந்து வரட்டும்.

டிவி ஷோகள் பண்ணு முன் உங்களை நீங்கள் எப்படி தாயர் பண்ணி கொள்வீர்?

ஆரம்ப கட்டத்தில் அதிகமாக வீட்டில் பயிற்சி எடுத்து கொள்வேன். இப்போ அப்படி கிடையாது. மனதை ஒரு நிலைபடுத்தி என்ன பண்ண வேண்டுமோ அதை மிக சிறப்பாக பண்ணி முடித்து விடுவேன்.

லவ் ப்ரொபோசல்?

(சிரித்து கொண்டே) காதலை பற்றி இது வரைக்கும் நான் நினைத்தது இல்லை. அதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்.

பிடித்த நடிகர்?

ஹ்ம்ம் சிம்பு எனக்கு பிடிக்கும். நடனம் நடிப்பு இவை இரண்டியும் மிக கச்சிதமாக பண்ண கூடிய நடிகர் அவர்தான்.  எப்போவும் நான் சிம்பு ரசிகை.

மறக்க முடியாத நாள்?

நீ நானா கோபி அவர் நடத்தும் ஷோக்கு நான் சென்று இருந்தேன்.  அப்போது அங்கு கீழே இருக்கும் குப்பையை யாரும் கவனிக்கவில்லை.  கோபி அந்த இடத்துக்கு வந்த உடன் அந்த குப்பையை எடுத்து போட்டு விட்டு ஷோ ஸ்டார்ட் பண்ணலாம்னு சொன்னாரு.  அதை பார்த்தவுடன் மனிதனா நம்ம நிறைய கத்துக்க வேண்டும் என்று நான் நினைத்துகொண்டேன்.

கருத்து?

கருத்து சொல்லும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. என் மனதில் சில விஷயம் ரொம்ப நாட்களாக உருத்தி கொண்டு இருக்கின்றது. அதை இந்த இடத்தில் சொல்ல ஆசைபடுகிரேன். பெண்களை பெண்களாக மதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் பெண்ணின் பெருமைகளையும் பண்பாட்டையும் சொல்லி வளர்க்க வேண்டும். அப்பொழுதான் நாளைய சமுதாயம் நன்றாக இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு  இருக்கும். நேரம் கிடைக்கும் தருணத்தில் உங்களை சந்திக்குறேன். நன்றி வணக்கம்.

– பாண்டியராஜன்