10 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டியை அகற்றி கேஎம்சிஎச் மருத்துவர்கள் சாதனை!

உலக மூளைக்கட்டி தினம் அனுசரிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு  முன்பு 10 வயதுள்ள சூடான் நாட்டைச் சேர்ந்த சிறுவனின்  மூளையில் இருந்த கட்டியை கேஎம்சிஎச் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜெ.கே.பி.சி.பார்த்திபன் அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெற்றிகரமாக அகற்றினார்.

சிறுவர்களுக்கு மூளையில் உண்டாகும் கட்டிகளை உரிய நேரத்தில் கண்டறியப்பட வேண்டும். இந்த அறுவைசிகிச்சை செய்வதற்கு, அதி நவீன மருத்துவ கருவிகளும், திறமையும், சிறந்த அனுபவமும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களும் தேவை.

மூளையில் கட்டி எற்பட்டுள்ள முஹம்மத் ஒமர் என்ற 10 வயது சிறுவன் ஓமான் நாட்டிலிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ மையம் & மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிறுவனை நரம்பியல் சிறப்பு நிபுணர் டாக்டர் அருள் செல்வன் அவர்கள் மூளையின் இடது பக்கத்தில் கடுமையான வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அந்த சிறுவனுக்கு, விரிவான மருத்துவ பரிசோதனைகளை  செய்தார். அப்பரிசோதனையில் சிறுவனின் மூளையின் ஆழ்ந்தபகுதியில் கட்டி இருப்பதை உறுதி செய்தார்.

முகத்திற்கு உணர்வுகளை எடுத்து செல்லும் நரம்புகள் மற்றும் மற்றகட்டமைப்புகள் நடுவே அந்த கட்டி உண்டாகி இருந்தது. கடுமையான வலியை தவிர வேறு எந்த விதமான நரம்பியல் ரீதியான பாதிப்பும் அந்த சிறுவனுக்கு ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து சிறுவனின் மூளையில் இருந்த கட்டியை, அதே மருத்துவமனையின் அறுவை சிகிச்சையின் சிறப்பு நிபுணர்  டாக்டர் ஜெ.கே.பி.சி.பார்த்திபன்  ஆலோசனைகளின் படி அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடலாம் என்று நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ப்ளுரோசென்ஸ் டை ஆப்டிகல் விஷுவலைசேஷன் (Fluorescence dye optical visualisation) என்ற தொழில் Cavitron Ultrasound  Suction Aspirator (CUSA) என்ற அதி நவீன கருவியையும் பயன்படுத்தி நான்கு மணி நேரத்தில் மிகவும் நுண்ணிய அறுவை சிகச்சையை (micro surgeries) செய்து மூளை கட்டியை அகற்றப்பட்டது.

சாதாரண மூளை திசுக்களிடமிருந்து கட்டியை வேறுபடுத்தி கண்டறிய, ப்ளுரோசென்ஸ் டை ஆப்டிகல் விஷுவலைசேஷன் தொழில்நுட்பம் பேருதவியாக இருந்தது, என்பதை விளக்கி கூறிய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் ஜெ.கே.பி.சி.பார்த்திபன் இயல்பாக அமைந்துள்ள மூளை திசுக்களுக்கு எந்த விதமான இடையூறுகளும் விளைவிக்காமல் கட்டியை Cavitron Ultrasound  Suction Aspirator (CUSA) என்ற அதிநவீன கருவியும் உதவியாக இருந்தது என்று கூறினார். கடுமையான வலியிலிருந்து நிவாரணம் பெற்ற, அந்த சிறுவனின் உடல் நிலை முழுமையான  ஆரோக்யம் பெற்றவுடன் 5 நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செயப்படும் என்றும் கூறினர்.

மூளையில் இருந்த கட்டியை அகற்றப்பட்ட சிறுவனை வாழ்த்திய  கே.எம்.சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.நல்ல ஜி பழனிசாமி  கே.எம்.சிஎச் மருத்துவமனையில் அதி நவீன மருத்துவ கருவிகள் மற்றும் திறமையும் அனுபவமும் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கின்ற  காரணத்தாலும் வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக ஆப்ரிக்க மற்றும் அரபு நாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருகிறார்கள் என்று கூறினார்.

மூளைகட்டிகள், தண்டுவடக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளாலும்  சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற பிரச்சினைகளாலும்  வருந்தும் உள்ளூர் நோயாளிகளுக்கும் கடைசி புகழிடமாக விளங்கும். கே.எம்.சிஎச் மருத்துவமனை தரம் உயர்ந்த சிகிச்சைகளை வழங்குவதில் உயர்ந்து நிற்கிறது என்றும் கூறினார்.