ரூபாய் 1க்கு 2கிலோ சின்ன வெங்காயம் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று (31.12.2018) விவசாயிகள், 1 ரூபாய்க்கு, 1 கிலோ சின்ன வெங்காயம் வாங்கினால், 1 கிலோ இலவசம் என கூறியபடியே விற்பனை செய்து நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது . தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதாகவும், மேலும் அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள்  தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர். வெங்காயத்தை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டால் யாருக்கும் பலனில்லாமல் போகும் என்பதால் , விளைவித்த வெங்காயத்தை பொதுமக்கள் பயன்படும்  என்ற நோக்கில் விற்பனை செய்யப்பட்டதாக கூறினர். இதனையடுத்து விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.