ரூ.1,753.87 கோடியை விடுவித்தல் தொடர்பான கோரிக்கை மனு

ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று (27.12.18) புதுடெல்லியில் மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் அவர்களை  நேரில் சந்தித்து, 14வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துறையின் அடிப்படையில், மத்திய அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டிய 2017-18ம் ஆண்டிற்கான செயலாக்க மானியம் ரூ.1,753.87 கோடியை விடுவித்தல் தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தார். இச்சந்திப்பின்போது, பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர்.தம்பிதுரை அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் அவர்கள், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் அவர்கள் உடனிருந்தனர்.